சி.வி. சண்முகம் பற்றி அரசியல் நாகரிகற்ற முறையில் பேசிய பாஜக தலைவர் அண்ணாமலைக்கு கண்டனம் - அருண்மொழிதேவன்
அ.தி.மு.க.அமைப்பு செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி. சண்முகம் பற்றி அரசியல் நாகரிகற்ற முறையில் பேசிய பாஜக தலைவர் அண்ணாமலைக்கு கண்டனம் தெரிவித்தார் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அருண்மொழிதேவன்.
தி.மு.க.ஆட்யில் பனை மரங்களை காப்பதாக பட்ஜெட் அறிவித்துவிட்டு, ரியல் எஸ்டேட் செய்வதற்காக திமுக பிரமுகர் நூற்றுக்கும் மேற்பட்ட பண மரங்களை வெட்டி உள்ளதை கண்டு கொள்ளவில்லை என_ அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அருண்மொழிதேவன் குற்றச்சாட்டு
🖱 அமைச்சர் உதயநிதிக்கு எந்த துறை சரியாக இருக்கும்...? - யோசனை கூறிய அண்ணாமலை
கடலூர் மேற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட விருத்தாச்சலம் நகரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மேற்கு மாவட்ட செயலாளரும், புவனகிரி அதிமுக சட்டமன்ற உறுப்பினருமான அருண்மொழித்தேவன் கலந்துகொண்டு கண்டன உரை நிகழ்த்தினார்.
கண்டன உரையில் சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, குடிநீர் வரி உயர்வு, கட்டுமான பொருட்களின் விலை உயர்வு, பால் விலை உயர்வு உள்ளிட்ட வரி உயர்வுகளை, ஆட்சிக்கு வந்து 18 மாதத்திற்குள், உயர்த்தி, மக்கள் விரோத போக்கை கடைபிடிக்கும் தமிழ அரசை கண்டித்தும், நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை மற்றும் போதை கலாச்சாரத்தை தடுக்காமல், மக்கள் அச்சப்படும் வகையில் சட்டம் ஒழுங்கு, சீர்கெட்டு இருப்பதை, தடுக்க தவறியதை கண்டித்தும் கண்டன முழுக்கங்களும் கண்டன உரையும் ஆற்றினார்.
மேலும் சில நாட்களுக்கு முன்பு நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில், அ.தி.மு.க அமைப்பு செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி. சண்முகம் அரசியல் ரீதியாக கருத்து சொன்னதற்கு, பாஜக மாநிலத் தலைவர் கட்சியின் முதற்கட்ட தலைவர்கள் கூற வேண்டும் என கூறியதற்கு கண்டனம் தெரிவித்தார்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் மக்களாலும் தொண்டர்களாலும் செயல்படக்கூடிய மாபெரும் இயக்கம் என்றும், அனைவருக்கும் பத்திரிக்கை சுதந்திரம் போல், கருத்து சுதந்திரம் உள்ளது என்றும், பல்வேறு விஷயங்களை கேள்விப்பட்டதன் பெயரில், மாநிலங்களவை உறுப்பினர், சிவி சண்முகம் அரசியல் ரீதியாக பேசியதற்கு, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அரசியல் நாகரிகம் அற்ற முறையில் பேசுவதாக குற்றம் சாட்டினார்.
மேலும் முதல் கட்டம் இரண்டாம் கட்டம் மூன்றாம் கட்டம் என பேசும் பாஜக தலைவர் அண்ணாமலை, திடீரென பாஜக கட்சியின் தலைவராக வந்துவிட்டார் என்றும், தற்போது திமுகவுக்கும் பாஜகவுக்கும் இடையே வாட்ச்-யின் விலை பற்றிய மோதல் நடந்து வருவதாக கிண்டல் செய்தார்.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணி கட்சி சார்பில் போட்டியிட்ட ஒரு வேட்பாளருக்கு, அக்கட்சியின் சார்பில் பூத் கமிட்டியில் அமர்வதற்கு ஆள் கூட இல்லை எனவும், சோசியல் மீடியாவிலும், பத்திரிக்கையாளர் சந்திப்பிலும் கட்சியை வளர்த்து நபர் என கூறி, சத்யராஜ்யின் அமாவாசை போல் பிஜேபி தலைவர் அண்ணாமலை உள்ளார் என சூசமாக எடுத்துரைத்தார்.
அது மட்டுமல்லாமல் தி. மு .க .அரசின் சட்டப்பேரவை கூட்டுத் தொடரில் பனை மரங்களை காப்பதற்காக பட்ஜெட்டில் நிதி ஒதுக்கி உள்ள நிலையில், கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே தி.மு,க பிரமுகர் ரியல் எஸ்டேட் நடத்துவதற்காக, நூற்றுக்கு மேற்பட்ட பனை மரங்களை வெட்டியிருப்பது வேளாண் துறை அமைச்சரும் கண்டு கொள்ளவில்லை என குற்றம் சாட்டினார்.
நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகளை குறித்து, வார இதழில் பேட்டி கொடுத்துள்ளதாகவும், அதில் அதிமுக நீலிக்கண்ணீர் வடிப்பதாக வேளாண் துறை. அமைச்சர் எம். ஆர். கே. பன்னீர்செல்வம் கூறியதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், எதிர்க்கட்சியாக இருக்கும்போது ஏக்கருக்கு ஒரு கோடி என வீர வசனம் பேசிவிட்டு, தற்போது விவசாயிகளுக்கு 25 லட்ச்சம் பிச்சை போடுவதாக கூறுவது என்ன நியாயம் என கேள்வி கேட்டார்.
மேலும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக ஆட்சியில் கொண்டு வந்த பல்வேறு திட்டங்களை முடக்கும் விடியா அரசுக்கு பொதுமக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்றும், தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றாத தமிழக அரசு என்றும், ஆட்சியை பொதுமக்கள் புறக்கணிப்பதாக கண்டன உரையில் எடுத்துரைத்தனர். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்துகொண்டு தமிழகஅரசுக்கு எதிராக, கைகளில் பதாதைகளை ஏந்திகொண்டு, கண்டன முழக்கங்கள் எழுப்பி எதிர்ப்பு தெரிவித்தனர்.


No comments
Thank you for your comments