Breaking News

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு திட்ட பணிகள் ஆய்வு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு  திட்ட பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் முனைவர் இல.சுப்பிரமணியன், இ.ஆ.ப., அவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.மா.ஆர்த்தி, இ.ஆ.ப., ஆகியோர் இன்று (21.12.2022) பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டனர்.



இன்று (21.12.2022) காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அவர்கள் மற்றும்  மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் காஞ்சிபுரம் மாநகராட்சிகுட்பட்ட படாளத்தெரு அரசு தொடக்கப்பள்ளியில் செயல்படுத்திவரும் முதலமைச்சரின் அவர்களின் காலை உணவு திட்டத்தின்கீழ், மாணவர்களுக்கு வழங்கப்பட்ட சிற்றுண்டியினை சாப்பிட்டு, உணவின் தரத்தினை பரிசோதித்தார். 

பின்பு காந்தி சாலையில், அமைந்துள்ள ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டத்தின்கீழ் செயல்பட்டுவரும் குழந்தைகள் மையத்தினையும், வாலாஜாபாத் ஒன்றியம், புளியம்பாக்கம் ஊராட்சியில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தினையும் பார்வையிட்டு, அங்குள்ள குழந்தைகளின் உயரம், எடை மற்றும் விவரங்கள் அடங்கிய பதிவேட்டினையும், குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வரும் உணவு தரத்தினையும், சமையலறையினையும் பார்வையிட்டு,  ஆய்வு மேற்கொண்டார்கள்.


இதனைத் தொடர்ந்து புளியம்பாக்கம் ஊராட்சியில் செயல்பட்டுவரும் நியாயவிலை கடையில் ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் பொருட்களின் இருப்பு நிலவரம் மற்றும் தரம் ஆகியவற்றை சரிபார்த்தனர். 


இதன் தொடர்ச்சியாக சங்கராபுரம் தோட்டக்கலை – மலைப்பயிர்கள் துறை சார்பில், விவசாயிகள் பயிரிடப்பட்டுள்ள பாகற்காய் கொடி தோட்டத்தினை பார்வையிட்டு, விவசாயிகளுக்கு இடுப்பொருட்கள் வழங்கினார்கள்.

பின்பு பழையசீவரம் பகுதியில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் தரிசு நில தொகுப்பினை பார்வையிட்டு, விவசாயிகளுக்கு விதை, தென்னை மற்றும் இடுப்பொருட்கள் வழங்கினார்கள். அதன்பின் வாலாஜாபாத் ஒன்றியத்திற்குட்பட்ட நசரத்பேட்டையில் இயங்கிவரும் அரசு பள்ளியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பழுதுபார்க்கும் பணிகளை பார்வையிட்டு, ஆசிரியர் பெருமக்களிடம் கலந்து உரையாடினார்.

இவ் ஆய்வின்போது ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்ட அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வேளாண் துறை அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.    


No comments

Thank you for your comments