Breaking News

என்எல்சி இந்தியா நிறுவனத்தை கண்டித்து அதிமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

விவசாயிகளையும், தொழிலாளர்களையும் வஞ்சித்து வரும்  நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனத்தை, கண்டித்து அதிமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


திறந்தவெளி சுரங்கத்தின் மூலம், பழுப்பு நிலக்கரி வெட்டப்பட்டு மின்சாரம் உற்பத்தி செய்யும்,  நிறுவனமாக செயல்பட்டு கொண்டிருக்கும் நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனம் கடந்த 1956 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதாகும்.

நாட்டு மக்களின் நலனுக்காக,  நெய்வேலியை சேர்ந்த, ஜம்புலிங்கம் என்பவர்,  கொடுத்த நிலத்தின் மூலம் ஆரம்பிக்கப்பட்ட என்எல்சி நிறுவனமானது,  தற்போது  சுமார் 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் வசித்த 25 ஆயிரம் குடும்பங்களை காலி செய்து விட்டு, அவர்களிடம் இருந்த 37,000 ஏக்கர் பரப்பளவு கொண்ட விவசாய நிலங்களை  அழித்து விட்டு,   நவரத்தினா என்ற புகழுடன் மாபெரும் நிறுவனமாக, செயல்பட்டு வருகிறது. 

🖱 அமைச்சர் உதயநிதிக்கு எந்த துறை சரியாக இருக்கும்...? - யோசனை கூறிய அண்ணாமலை

அவ்வாறு ஆயிரக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழித்துவிட்டு,  மாபெரும் நிறுவனமாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனத்தில்,  சுரங்கம் ஒன்று சுரங்கம், ஒன்றின் விரிவாக்கம் சுரங்கம் இரண்டு என மூன்று சுரங்கத்தின் மூலம், நாள் ஒன்றுக்கு 15 ஆயிரம் மெட்ரிக் டன் நிலக்கரி வெட்டி எடுத்து,  3750 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்து, தமிழ்நாடு மட்டுமில்லாமல், வெளி மாநிலங்களுக்கும் அனுப்பிவருகிறது

வருடா வருடம் கோடிக்கணக்கில் நிகர லாபம் மட்டுமே ஈட்டக்கூடிய,  என்எல்சி நிறுவனம், விவசாயிகளிடமிருந்து நிலங்களை கையகப்படுத்தும் போது கொடுத்த வாக்குறுதியை, ஆரம்ப காலகட்டத்தில் இருந்து,  தற்போது வரை நிறைவேற்றாமல் ஏமாற்றி வருவதை கண்டித்து  நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனத்தின் இரண்டாவது சுரங்கத்தின் முன்பு,  அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில்,   மாபெரும் கண்டன நடைபெற்றது.

கடலூர் மேற்கு மாவட்ட செயலாளரும், புவனகிரி அதிமுக சட்டமன்ற உறுப்பினருமான அருண்மொழி தேவன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், 

கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சரும், தற்போதைய எம்பியுமான சிவி சண்முகம் கலந்துகொண்டு,  கண்டன உரை ஆற்றினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில்  நெய்வேலி என்எல்சி நிறுவனத்தால் வாழ்வாதாரத்தை இழந்த, விவசாயிகள்,  படித்து முடித்துவிட்டு, வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்கள், என்.எல்.சியில் இருந்து, வெளியேற்றப்பட்ட தொழிலாளர்கள், என்எல்சி யில் அப்ரண்டீஸ் பயிற்சி முடித்துவிட்டு, வேலைக்காக,  போராடிக் கொண்டிருக்கும் இளைஞர்கள் என  ஜந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 

நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனம், வீடு மற்றும் நிலங்களை கையகப்படுத்திய விவசாயிகளுக்கு சம அளவிலான இழப்பீடும், நிரந்தர வேலை வழங்காத மத்திய, மாநில அரசுகளை  கண்டித்தும், 

எவ்வித முன்னறிவிப்பும் இன்றி, பல ஆண்டுகளாக பணியாற்றி வந்த செக்யூரிட்டி பணியாளர்களை, வேலையை விட்டு நிறுத்திய, மனிதாபிமானம் இல்லாத என்.எல்.சி நிர்வாகத்தை கண்டித்தும்,

என்.எல்.சி நிர்வாகத்துடன் தொழிற்சங்கம் நடத்திய பேச்சு வார்த்தையின் அடிப்படையில், நடப்பாண்டு நிரந்தரப் பணி ஆணையை வழங்காமல் காலம் தாழ்த்தி வருவதை கண்டித்தும், சுரங்க விரிவாக்கம் என்ற பெயரில், மாவட்ட நிர்வாகத்துடன் கைகோர்த்துக்கொண்டு, காவல்துறை உதவியுடன், பொதுமக்களை அச்சுறுத்தி வருவதை கண்டித்தும்,  கையில் பதாதிகளை ஏந்தி கொண்டு,  கண்டன முழக்கங்களையும்,  கண்டன உரையும்  நிகழ்த்தப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தில் மாநிலங்களவை உறுப்பினர் சிவி சண்முகம் ஆற்றிய கண்டன உரை

இந்தியா முழுவதும் இயங்கி வரும் ஒன்பது பொதுத்துறை நிறுவனங்களில், பெரும்பாலான நிறுவனங்கள்,  நஷ்டத்தில் இருக்கும் நிலையில்,   நவராத்னா என்று சொல்லப்படுகின்ற நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனம் அதிக,  லாபத்தில் இயங்குகின்ற நிறுவனமாக உள்ளது என்றும், வருடத்திற்கு 2000 கோடி ரூபாய் லாபம் மட்டும் ஈட்டுவதாக தெரிவித்தார்.

நிலம் எடுப்பதோ? இழப்பீடு கொடுப்பதோ? வேலை வாய்ப்பு கொடுப்பதோ, என அனைத்தும் மத்திய அரசாங்கம், மாநில அரசாங்கத்தின் மூலமாக தான் செயல்படுத்த வேண்டும் ஆனால் அதுபோல் மத்திய அரசாங்கம் செய்யாமல் வஞ்சித்து வருவதாக குற்றம் சாட்டினார். இதனால் 60 ஆண்டு காலமாக என்எல்சி நிர்வாகம் எதுவும் செய்யாமல், ஆணவ போக்குடன் செயல்பட்டு வருவதாக குற்றம் சாட்டினார்.

இந்தியாவிலேயே நெய்வேலி என்எல்சி நிறுவனத்தில் மட்டும் தான், விவசாயிகளை ஏமாற்றுவதாகவும், 

பல்வேறு பிரச்சனைகளுக்கு குரல் கொடுக்கும் பாஜக, என்எல்சி பிரச்சனைக்கு குரல் கொடுக்கவில்லை என கடுமையாக சாடினார்.

நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனத்தால் அதிகளவில் பாதிக்கப்பட்டது கடலூர் மாவட்டம் என்றும், கடந்த எடப்பாடி யார் ஆட்சி காலத்தில், கடலூர் மாவட்டத்தை பாதிக்கப்பட்ட மாவட்டமாக அறிவித்தார் என்று கூறினார். 

மேலும் கடலூர் மாவட்டம் மட்டுமல்லாமல், மாவட்டங்களான விழுப்புரம் கள்ளக்குறிச்சி மாவட்டங்களிலும் என்எல்சி நிறுவனத்தால் பாதிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

ஆனால் கடலூர் மாவட்டத்தில் உள்ள இரண்டு திமுக அமைச்சர்கள் விவசாயிகளை பாதுகாக்க எவ்வித நடவடிக்கை மேற்கொள்ளவில்லை எனவும்,  எதுவும் கிழிக்கவில்லை என குற்றம் சாட்டினார்.

நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனத்தின் சி எஸ் ஆர் பொறுப்பு நிதியிலிருந்து ஆண்டுதோறும் ஆயிரம் கோடி ஒதுக்க வேண்டும் என்றும், அவ்வாறு ஒதுக்கப்படுகின்ற நிதியிலிருந்து, பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு சாலை வசதி, குடிநீர் வசதி, மருத்துவமனை வசதி, உள்ளிட்ட விலை செய்து தர வேண்டும் என்றும் ஆனால் நெய்வேலி என்எல்சி நிர்வாகம் எந்தவித வசதிகளையும் ஏற்படுத்தி தராமல்,  என்எல்சி சேர்மன் சொந்த மாநிலத்திற்கு சி எஸ் ஆர் நிதியை அனுப்புவதாக குற்றம் சாட்டினார். அதுமட்டுமில்லாமல் என்எல்சி நிறுவனத்திற்கு தைரியம் இருந்தால், கடந்த 60 ஆண்டு காலத்தில்,  சி எஸ் ஆர் நிதி எவ்வளவு ஒதுக்கப்பட்டுள்ளது என்றும், செலவு செய்து உள்ளது எவ்வளவு என்றும், கூறுவதற்கு தைரியம் உள்ளதா என கேள்வி எழுப்பினார்.

பொதுமக்களின் பிரச்சினையை தீர்க்கக்கூடிய கடலூர் மாவட்ட ஆட்சியர் நெய்வேலி என்எல்சி நிறுவனத்திற்கு மாமா வேலை பார்ப்பதாகவும், செக்யூரிட்டி வேலை பார்ப்பதாகவும் குற்றம் சாட்டினார்.

ஆண்டுதோறும் கொள்ளை இலாபம் ஈட்டுகின்ற நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனம், 2014 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சட்டத்தின் படி, சந்தை மதிப்பை விட இரண்டு மடங்கு கூடுதலாக தர வேண்டும் என சட்டம் கூறுகையில், அதனை தர மறுப்பதாக குற்றம் சாட்டினார்.

தொடர்ச்சியாக மத்திய மாநில அரசுகள் கடலூர் மாவட்ட மக்களை வஞ்சித்து வருவதாகவும், செழுமையாக இருந்த கடலூர் மாவட்டம் தற்போது நெய்வேலி என்எல்சி நிறுவனத்தால் நிலத்தடி நீர்மட்டம் ஆயிரம் அடிக்கு கீழே சென்று விட்டதாக குற்றம் சாட்டினார்.

நெய்வேலி என்எல்சி பிரச்சனைக்காக போராடவதாக கூறும் திமுகவின் கூட்டணி கட்சியினர், ஒரு வருடத்திற்குள், ஸ்டாலின் தீர்க்கவில்லை என்றால், நாங்கள் கூட்டணி ஆதரவை திரும்பப் பெறுகிறோம் என விடுதலை சிறுத்தை கட்சி திருமால் வளவனோ, தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேல்முருகனோ கூறுவார்களா என கேள்வி? எழுப்பினார்.

நிலக்கரி சுரங்கங்கள் மத்திய அரசு நேரடி கட்டுப்பாட்டில் உள்ளது என்றும்,  மத்திய நிலக்கரித்துறை பிற மாநிலங்களில்,  உரிய இழப்பீடு, வேலைவாய்ப்பு வழங்கும்போது, தமிழ்நாட்டிற்கு மட்டும் விதிவிலக்காக பழி வாங்குவதாக குற்றச்சாட்டினார்..

நெய்வேலி என்எல்சி பிரச்சனை பற்றி பேச முடியாத திமுகவின் எம்பிகள் 39 பேரும் டெல்லியில் பிச்சை எடுப்பதாக குற்றம் சாட்டினார். 

நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனத்திற்கு வீடு மற்றும் நிலம் கொடுத்தவர்களுக்கு நிரந்தர வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என்றும்,  அவ்வாறு வணங்க விட்டால் சட்டப் போராட்டத்தில் ஈடுபடுவோம் என என்எல்சி நிறுவனத்திற்கு எச்சரிக்கை விடுத்தார்.

இது மட்டுமில்லாமல், ஆட்சிக்கு வந்து 18 மாதத்திற்குள்,  தமிழக மக்களை வாட்டி வதைக்கும் அளவிற்கு,  சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, கட்டுமான பொருட்களின் விலை உயர்வு, விலைவாசி உயர்வுகளை ஏற்படுத்தி, மக்கள் விரோதப் போக்கை கடைபிடிக்கும்  திமுக அரசின் செயல்பாடுகளை கண்டித்தும், கவர்ச்சியான தேர்தல் வாக்குறுதிகளை அளித்து ஆட்சிக்கு வந்ததும் அவற்றை நிறைவேற்றாத செயலை கண்டித்தும் கண்டன முழக்கங்களும் கண்டன உரையும் நிகழ்த்தப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் பாண்டியன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் முருகுமாரன், சிவசுப்பிரமணியன், கலைச்செல்வன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இறுதியில் ஒன்றிய செயலாளர் சின்ன ரகுராமன் நன்றியுரை ஆற்றினார்.

No comments

Thank you for your comments