சாலைகளில் திரியும் மாடுகளால் வாகன ஓட்டிகள் பெரும் அவதி... உயிர் பலி வாங்கும் முன் நடவடிக்கை எடுக்குமா மாநகராட்சி...
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஆவடி காவல் ஆணையரகம் சென்னையில் இருந்து திருவள்ளூர் செல்லும் சாலையில் மாடுகள் கூட்டமாக திரிவதால் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் பெரும் அச்சத்துடன் செல்கின்றனர்
மாவட்ட ஆட்சியர் ஆல்பீ ஜான் வருகீஸ் அவர்கள் என்னதான் உத்தரவு பிறப்பித்தாலும் கால்நடைகள் சாலையில் திரிவது வழக்கமாக உள்ளது
ஆவடி மாநகராட்சி அதிகாரிகள் இதனை கண்டு கொள்ளாததால் கால்நடை உரிமையாளர்கள் சாலைகளிலேயே மாடுகளை விட்டு விடுகின்றனர்.
🖱 நிறைய அமைச்சர்களுக்கு வாய்கோளாறு...
பட்டியலிட்டு பங்கம் செய்த பாஜக அண்ணாமலை
இதனால் வாகன ஓட்டிகள் கீழே விழுந்து உயிர் பலி ஏற்படும் அபாயம் உள்ளது. உடனடியாக ஆவடி மாநகராட்சி ஆணையர் தற்பகராஜ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இனியாவது, ஆவடி மாநகராட்சி அதிகாகரிகள் உடனடி நடவடிக்கை எடுப்பார்களா...? இல்லை செவிடன் காதில் ஊதிய சங்கு போல இருப்பார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்...

No comments
Thank you for your comments