தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் கொடியேற்றும் விழா
விருத்தாசலத்தில் தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் ஓய்வூதியர் தின விழாவினை முன்னிட்டு சங்கத்தின் கொடியேற்றும் விழா நடைபெற்றது.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் மேற்கு மாவட்ட சங்கம்சார்பில் ஓய்வூதியர் தின விழாவில் சங்த்தின் கொடியேற்றி இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்
நிகழ்ச்சியில் மாவட்டத் தலைவர் சங்கக் கொடி ஏற்றி தலைமை உரையாற்றினார் மாவட்டத் துணைத் தலைவர்கள் காசிலிங்கம் ராஜமாணிக்கம் ஜெயவேல் ஆகியோர்களின் முன்னிலையில் நடைபெற்ற இந்த விழாவில் மாவட்ட இணை செயலாளர்கள் ராமச்சந்திரன், முருகேசன், பெரியநாயகம், வரவேற்பு நிகழ்த்தினார்கள் மாவட்ட செயலாளர் தீனபந்த் துவக்க உரையாற்றினர்
🖱 அமைச்சர் உதயநிதிக்கு எந்த துறை சரியாக இருக்கும்...? - யோசனை கூறிய அண்ணாமலை
இதில் மாநிலத் துணைத் தலைவர் அண்ணாதுரை, தலைமை நிலைய செயலாளர் இராமன் , உதவி கருவூல அலுவலர் கேசவலு விருத்தாசலம் கனரா வங்கி முதன்மை மேலாளர் டேவிட் மற்றும் அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் பலரும் கலந்துகொண்டனர்

No comments
Thank you for your comments