Breaking News

புதியதாக கட்டப்பட்ட சிறு மேம்பாலத்தால் குடியிருப்புகளுக்குள் புகுந்த வெள்ள நீர், பொதுமக்களை மீட்ட தீயணைப்புத்துறையினர்

காஞ்சிபுரம் 

காஞ்சிபுரம் தாயார்குளம் பகுதியில் வேகவதி ஆற்றின் குறுக்கே அண்மையில் புதியதாக கட்டப்பட்டிருந்த சிறு மேம்பாலத்தால் ஞாயிற்றுக்கிழமை வெள்ளநீர் குடியிருப்புகளுக்குள் புகுந்ததால் தீயணைப்புத்துறையினர் பொதுமக்களை மீட்டு முகாம்களுக்கு அனுப்பி வைத்தனர்.

படவிளக்கம் : வேகவதி ஆற்றில் வரும் வெள்ளநீர் செல்ல தடையாக இருக்கும் சிறு மேம்பாலத்தின் இரு புறங்களையும் ஜெசிபி இயந்திரங்கள் உடைப்பதை பார்வையிடும்(வலது ஓரம்) காஞ்சிபுரம் மாநகராட்சி ஆணையர் ஜி.கண்ணன்

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பின்புறம் தாயார்குளம் பகுதியில் வேகவதி ஆற்றங்கரையோரத்தில் 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.இப்பகுதியில் அண்மையில் புதியதாக சிறு மேம்பாலம் கட்டப்பட்டிருந்தது. மாண்டஸ் புயல் மற்றும் கனத்த மழை காரணமாக வேகவதி ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. 

வெள்ளநீர் வேகமாக ஆற்றில் பெருக்கெடுத்து வந்த போது ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருந்த சிறு மேம்பாலம் தடையாக இருந்ததால் சற்றும் எதிர்பாரத விதமாக வெள்ள நீர் ஆற்றங்கரையோரங்களிலிருந்த குடியிருப்புகளுக்குள் புகுந்து விட்டது.

பதவி வரும் போகும் கழகம் தான் நம் அடையாளம்...
நம் உயிர் மூச்சு.....   முதல்வர் மு.க ஸ்டாலின் பேச்சு

மின்வாரியத்தினர் சமயோஜிதமாக மின் இணைப்புகளை துண்டித்தனர்.வீடுகளுக்குள் வெள்ளநீர் சூழந்த தகவலையடுத்து தீயணைப்பு நிலைய அலுவலர் கார்த்திகேயன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்தனர்.

தண்ணீர் சூழந்த நிலையிலும் வீடுகளுக்குள் இருந்தவர்களை பத்திரமாக வெளியில் கொண்டு வந்து கயிறு மூலம் கரைக்கு கொண்டு வந்து சேர்த்தனர்.பின்னர் மீட்கப்பட்டவர்கள் அனைவரும் அருகில் உள்ள பிள்ளையார் பாளையம் முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

வெள்ளநீர் வடிவதற்கு பாலம் இடையூறாக இருந்ததால் காஞ்சிபுரம் மேயர் எம்.மகாலட்சுமி யுவராஜ், ஆணையர் ஜி.கண்ணன்,வட்டாட்சியர் பிரகாஷ் ஆகியோர் உடனடியாக பாலத்தின் இருபுறத்தையும் உடைத்து தண்ணீரை வெளியேற்ற உத்தரவிட்டனர்.

இதனையடுத்து இரு ஜெசிபி இயந்திரங்கள் மூலம் பாலத்தின் இருபுறங்களும் உடைத்து வெள்ளநீர் வெளியேற வழிவகுத்தனர்.வேகவதி ஆற்றில் மேலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளது என்பதால் பொதுமக்கள் மீண்டும் குடியிருப்புகளுக்குள் சென்று விடாதவாறு பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.


No comments

Thank you for your comments