Breaking News

வேகவதி ஆற்றில் தொடர்ந்து இரண்டாவது நாளாக சுமார் 2 ஆயிரம் கன அடி நீர் செல்கிறது.... எச்சரிக்கை விடுப்பு

 காஞ்சிபுரம் :

காஞ்சிபுரம் மாநகரின்  மையப்பகுதில் உள்ள வேகவதி  ஆற்றில் தொடர்ந்து இரண்டாவது நாளாக சுமார் 2 ஆயிரம் கன அடி நீர் செல்கிறது.

தாயார்குளம் பகுதியிலுள்ள வேகவதி ஆற்றங்கரையில் உள்ளவர்கள் பாதுகாப்பாக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.


காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கன மழையின் காரணமாக மாவட்டத்திலுள்ள ஏரி,குளம் உள்ளிட்ட நீர் நிலைகள் நிரம்பி உபரி நீரானது வெளியேறி வருகிறது.

இந்நிலையில் காஞ்சிபுரம் மாநகரின் மையப்பகுதியில் உள்ள வேகவதி ஆற்றில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு தொடர் கன மழையின் காரணமாக திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சுமார் 600கன அடி நீரானது ஆர்பரித்து சென்றது.


இந்த திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பின்புறத்திலுள்ள தாயார்குளம் பகுதியில் வேகவதி ஆற்றங்கரையோரங்களில் மழை வெள்ள நீரானது சூழத்துவங்கி நிலையில் நேற்றைய தினம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மிக பெரிய ஏரிகளில் ஒன்றான தாமல் ஏரியிலிருந்து வெளியேறும் உபரி நீர் மற்றும் பல்வேறு  பகுதிகளில்  பெய்த மழை நீரும் சேர்ந்து வேகவதி ஆற்றில் சுமார் 2 ஆயிரம் கன அடி நீரானது வரத்துவங்கி பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதன் காரணமாக தாயார்குளம்  ஆற்றங்கரையோரங்களிலுள்ள குடியிருப்புகளில் வெள்ள நீர் உள் புகுந்து அப்பகுதியினர் வீட்டை விட்டு வெளியேறா முடியாமல் தவித்து வந்ததையடுத்து மாவட்ட நிர்வாகம் மூலம் தீயணைப்பு மற்றும் காவல்துறை மூலம் மீட்புப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு  அப்பகுதி பொது மக்கள் பாதுகாப்பாக நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் தாயார்குளம் பகுதியில் வேகவதி ஆற்றின் குறுக்கே உள்ள இரண்டு சிரிய தரைப்பாலங்களில் ஒரு பகுதியினை வெள்ள நீர் செல்ல ஏதுவாக ஜேசிபி இயந்திரங்கள் மூலம் மாவட்ட நிர்வாகம் உடைத்தனர்.

இந்நிலையில் இன்று இரண்டாவது நாளாக வேகவதி ஆற்றில் சுமார் 2ஆயிரம் கன அடி நீரானது ஆர்பரித்துக்கொண்டு செல்கிறது. தொடர்ந்து வேகவதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 2 ஆயிரம் கன அடி நீரானது செல்கின்ற காரணத்தால் அப்பகுதியில் பொது மக்கள் யாரும் வேடிக்கை பார்க்கவோ, அப்பகுதியை கடந்து செல்லவோ தடுக்கும் பொருட்டு காவல்துறையினர் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தற்போது காஞ்சிபுரம் மாநகராட்சியில் விட்டு விட்டு கன மழை பெய்து வருகின்ற காரணத்தாலும்,பல்வேறு பகுதிகளில் பெய்த தொடர் மழை காரணமாகவும் இன்னும் ஓரிரு நாட்களுக்கு இந்த வேகவதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு நீடிக்கும் எனவும், மழை பெய்யாமல் இருந்தால் ஓரிரு நாட்களில் வெள்ளப்பெருக்கு  குறைய வாய்ப்புள்ளதாக பொதுப் பணித்துறையினர் தகவல் தெரிவிக்கின்றனர்.

No comments

Thank you for your comments