விருத்திகிரீஸ்வரர் ஆலயத்தில் சாமி தரிசனம் செய்ய வந்த பெண்ணிடம் கழுத்தில் இருந்த தங்கசெயினை பறிக்க முயன்ற இளைஞர்
விருத்தாசலம் விருத்திகிரீஸ்வரர் ஆலயத்தில் சாமி தரிசனம் செய்ய வந்த பெண்ணிடம் கழுத்தில் இருந்த தங்கசெயினை பறிக்க முயன்ற இளைஞரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் புகழ்பெற்ற விருத்திகரீஸ்வரர் ஆலயம் உள்ளது. இங்கு தினமும் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர் .
இந்நிலையில் இன்று காலை 8:30 மணி அளவில் சாமி தரிசனம் செய்ய வந்த பெண்ணிடம் இளைஞர் ஒருவர் கழுத்தில் இருந்த தங்கசெயினை பறிக்க முயன்றுள்ளார். அப்போது அந்த பெண் பயத்தில் கொச்சிடவே அந்த வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடினார்.
தப்பிய ஓடியவர் வாலிபர் அருகில் உள்ள கண்காணிப்பு கேமராவை உடைக்க முயன்றுள்ளார். ஆனால் அருகிலுள்ள பொதுமக்கள் அவரை பிடிக்க முயன்றபோது அந்த இளைஞர் தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது.
🖱 அமைச்சர் உதயநிதிக்கு எந்த துறை சரியாக இருக்கும்...? - யோசனை கூறிய அண்ணாமலை
இந்நிலையில் பகலிலே, எப்பொழுதும் மக்கள் நடமாட்டம் உள்ள கோவிலுக்கு வந்த பெண்ணிடம் வாலிபர் ஒருவர் தங்கச் செயினை பறிக்க முயன்ற சம்பவம் விருத்தாசலம் பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
தகவல் அறிந்து அங்கு வந்த விருத்தாசலம் காவல்துறையினர் கோவிலில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்...

No comments
Thank you for your comments