Breaking News

வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 287 மனுக்கள்

காஞ்சிபுரம் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில்,  சிறப்பு குறைதீர்வு வாரம் அனுசரிக்கப்பட்டு,  பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை மாவட்ட வருவாய் அலுவலா் திரு.கோ.சிவருத்ரய்யா அவர்கள் பெற்றுக் கொண்டார்.



 காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் நல்லுறவு மையத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று (19.12.2022) மாவட்ட வருவாய் அலுவலா் திரு.கோ.சிவருத்ரய்யா அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு மையத்தில் பிரதி திங்கட்கிழமை தோறும் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, அம்மனுக்கள் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு வழங்கி தீர்வு காணப்பட்டு வருகிறது.

 இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் அவர்கள் தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்து 287 மனுக்களை பெற்று அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அரசு துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்கள்.

🖱 அமைச்சர் உதயநிதிக்கு எந்த துறை சரியாக இருக்கும்...? - யோசனை கூறிய அண்ணாமலை

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், 19.12.2022 முதல் 25.12.2022 வரை சிறப்பு குறைதீர்வு வாரம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த சிறப்பு குறைதீர்வு வாரத்தில், காஞ்சிபுரம் வட்டம், மருதம் கிராமத்தை சேர்ந்த 3 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப்பட்டாவும், 6 பயனாளிகளுக்கு முதியோர் மற்றும்  இதர உதவித்தொகைகளும்  மாவட்ட வருவாய் அலுவலா் அவர்கள் வழங்கினார்கள்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திரு.புண்ணியகோட்டி, துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) திருமதி.சுமதி, மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலர் திரு.கு.பிரகாஷ் வேல் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.

No comments

Thank you for your comments