Breaking News

மாண்டஸ் புயலால் பாதுகாப்பான இடத்தில் தங்க வைத்தவர்களுக்கு தேவையானவற்றை வழங்கல்

காஞ்சிபுரம் மாவட்டம் ஒன்றியத்துக்கு உட்பட்ட கீழ்அம்பி ஊராட்சி பகுதியில் வசித்து வரும் பழங்குடியினர் இருளர் இனமக்கள் ஏழ்மை நிலையில் குடிசையில் வாழ்ந்து வருவதால், தாழ்வான பகுதிகளில் வசிக்கின்ற அவர்களை புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அருகில் உள்ள பள்ளிகளில் தங்க வைக்கப்பட்டனர்.


மாண்டஸ் புயலால் மக்கள் பாதிக்காத வகையில்  வீடு இல்லாதவர்களுக்கும், குடிசைப் பகுதியில் வசிப்பவர்களுக்கும், பாதுகாப்பான இடத்தில் தங்க வைத்து உரிய ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு முதல்வரின் அறிவிப்பின்படி காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியம் கீழம்பி ஊராட்சியில் வசிக்கும் பழங்குடி மக்கள், நரிக்குறவர் குடும்பங்களை பள்ளியில் தங்கவைக்க  ஒன்றிய பெருந்தலைவர் மலர்க்கொடிகுமார் தலைமையில்  ஏற்பாடுகள் செய்யப்பட்டதை  கூடுதல்  ஆட்சியர் அர்பித்ஜெயின், கோட்டாட்சியர் கனிமொழி ஆகியோர் பார்வையிட்டு அன்றாட தேவையான படுக்கை, போர்வை, முன்று வேளையும் உணவுகள் வழங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உணவு வழங்கினார்கள்.

மேலும் மழை பாதிப்பின் காரணமாக தொற்று நோய் ஏற்படாவண்ணம் முகாமில் தங்கி உள்ளவர்களுக்கு மருத்துவர்கள் பரிசேதனை செய்து தேவையான மருந்துகள் வழங்கினர், உடன் வட்டார வளர்ச்சி அலுவலர், ஊராட்சி மன்ற தலைவர்,துணை தலைவர், கிளைகழக செயலாளர் ராஜசேகர், வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

No comments

Thank you for your comments