Breaking News

ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனத்தில் 75 ஆவது மனித உரிமைகள் தின கொண்டாட்டம்...

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள மத்திய அரசுக்கு சொந்தமான ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனத்தில் 75 ஆவது மனித உரிமைகள் தினம் கொண்டாடப்பட்டது.



இவ்விழாவில் குஜராத் மாநில மனித உரிமைகள் ஆணையம் மற்றும்  குஜராத் உயர் நீதிமன்ற நீதிபதி ரவி.ஆர்.திரிபாதி மற்றும் பெண்கள் உரிமை ஆர்வலர் மற்றும் மேம்பாட்டு ஆலோசகர் பிருந்தா அடிகே ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.

மனித உரிமை என்றால் என்ன?.. நமது உரிமைகளை நாம் எவ்வாறு மீட்டெடுக்க வேண்டும் என்பது குறித்தான  விழிப்புணர்வை ஏற்படுத்தி வணிக பாலியல் வேலை, பாலியல் துஷ்பிரயோகம், உடல் ரீதியான துஷ்பிரயோகம், உளவியல் ரீதியான துஷ்பிரயோகம் குறித்து கூறி அங்கு கூடியிருந்த மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கினர் .

மேலும் ராஜீவ் காந்தி இளைஞர் மேம்பாட்டு நிறுவன மாணவர்கள் ஆணுக்கும் பெண்ணுக்கும் நடுவில் திருநங்கை எவ்வாறு பாதிக்கப்படுகிறார்.

எப்படி திருநங்கை தனது உரிமைகளை மீட்டெடுக்க வேண்டும் என குறு நாடகத்தின் வாயிலாக தங்கள் திறமையை வெளிப்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Thank you for your comments