Breaking News

ஆவடியில் மழை நீர் கால்வாய் கட்டும் பணியில் முறைகேடு

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட ஆவடி மாநகராட்சிக்கு பின்புறம் அமைந்துள்ள ஹௌசிங் போர்டு பகுதியில் சுமார் 40 கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்து மழைநீர் கால்வாய் கட்டும் பணி நடைபெற்று வருகிறது 



இருந்தாலும் தற்போது பெய்த மழையால் கால்வாய் நிரம்பி சாலைகளில் மழை நீர் ஓடும் அவல நிலை ஏற்பட்டுள்ளது

ஹவுசிங் போர்டு மற்றும் வசந்த நகர் தென்றல் நகர் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து  மழைக் காலங்களில் தண்ணீர் நிரம்பி சாலைகளில் ஓடுவதால் அப்பகுதி மக்கள் அவதிப்படும் நிலை தற்போது வரை நீடித்து உள்ளது 

மழை நீர் கால்வாய் கட்டும் பணி சரியாக கட்டாததால் மழை நீர் கால்வாயில் மழை நீர் நிறைந்து சாலைகளில் பெருகெடுத்து ஓடும் தண்ணீரால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்

🖱 நிறைய அமைச்சர்களுக்கு வாய்கோளாறு... 

பட்டியலிட்டு பங்கம் செய்த பாஜக அண்ணாமலை

ஹவுசிங் போர்டு பகுதியில் மழை நீர் கால்வாய் முறையாக கட்டாததால் மழைநீர் செல்ல வழி இல்லாமல் சாலைகளில் ஓடுகிறது என்று அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டுகின்றனர்.

மழை நீர் கால்வாய் அமைத்த பொறியாளர் மற்றும் உதவி பொறியாளர் ஒப்பந்ததாரர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்

No comments

Thank you for your comments