அ.ம.மு.கழக தலைவர் டி.டி.வி.தினகரன் 60-வது பிறந்த நாள் விழா முன்னிட்டு பெரியநாயகி உடனுறை பழமலைநாதர் ஆலயத்தில் சிறப்பு அபிஷேகம்
விருத்தாசலத்தில் அ.ம.மு.கழக தலைவர் டி.டி.வி.தினகரன் 60-வது பிறந்த நாள் விழா முன்னிட்டு பெரியநாயகி உடனுறை பழமலைநாதர் ஆலயத்தில் சிறப்பு அபிஷேகம் செய்து பொதுமக்களுக்கு இனிப்பு, மற்றும் அன்னதானம் வழங்கி கொண்டாடினர்
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகதலைவர் டி.டி.வி தினகரனின் 60 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு கடலூர்வடக்கு மாவட்டம், மற்றும் நகர அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் விருத்தாசலம் ஸ்ரீ விருதாம்பிகை பாலாம்பிகை உடனுறைஸ்ரீ விருதகிரிஸ்வரர்என அழைக்கப்படும் பெரியநாயகி உடனுறை பழமலைநாதர் ஆலயத்தில் மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை செய்து பெரியநாயகர் சன்னதியில்.பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கினர்.
🖱 நிறைய அமைச்சர்களுக்கு வாய்கோளாறு...
பட்டியலிட்டு பங்கம் செய்த பாஜக அண்ணாமலை
பின்பு கடலூர் சாலையில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து பொதுமக்களுக்கு இனிப்புகளும் 500 பேருக்கு அன்னதானம் வழங்கினர்
கடலூர் வடக்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழக செயலாளர் அக்ரி.முருகேசன் தலைமையில், நகர செயலாளர் பாலபிரகாஷ், வர்த்தக அணி செயலாளர் பாபு, கிழக்கு ஒன்றிய செயலாளர் வீரபாண்டியன் முன்னிலையில் நடைபெற்ற இந்த பிறந்தநாள் விழாவில் ஏராளமான மாவட்ட, நகர, ஒன்றிய, நிர்வாகிகள் கலந்து கொண்டனர்


No comments
Thank you for your comments