Breaking News

காஞ்சிபுரத்தில் தேசிய மின் சிக்கன வார விழா விழிப்புணர்வு பேரணி

காஞ்சிபுரம் டிச 21-

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம், காஞ்சிபுரம் வடக்கு கோட்டம் மின் பகிர்மானம் சார்பில் தேசிய மின் சிக்கன வார விழா விழிப்புணர்வு  பேரணி நடைபெற்றது. கூடுதல் தலைமை பொறியாளர் சண்முகம் தலைமை தாங்கினார்.



காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் துவங்கிய பேரணி சங்கர மடம்,பூக்கடை சத்திரம் உள்ளிட்ட நான்கு ராஜ வீதிகளில் வலம் வந்து மீண்டும் பேருந்து நிலையத்தில் நிறைவு பெற்றது.

நாளைய வெளிச்சத்திற்கு இன்றே சேமிப்போம் என்ற வாசகத்தை முன்னிறுத்தி நடைபெற்ற இந்த பேரணியில் கல்லூரி மாணவர்கள் மற்றும் மின்துறை அதிகாரிகள் கலந்து கொண்டு மின் சிக்கனங்களை குறித்து விளக்கும் துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

மேலும்,மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும், தரமான மின் சாதன பொருட்களை வாங்கி பயன்படுத்துவது, பாதுகாப்பாக விழிப்புடன் இருக்க செய்ய வேண்டிய வழிமுறைகள் குறித்தும் ஒலிபெருக்கி மூலம் எடுத்துரைக்கப்பட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது 

இந்த பேரணியில் செயற்பொறியாளர் பிரசாத்,உதவி செயற்பொறியாளர் இளையராஜன்,  ஏழுமலை, ஏகாம்பரம் மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

No comments

Thank you for your comments