Breaking News

தொழில்நுட்ப ஆலோசகராக (Consultant) பணிப்புரிய அரிய வாய்ப்பு... உடனே விண்ணப்பிக்கலாம்..

வாழ்ந்து காட்டுவோம் திட்டம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் கீழ் உலக வங்கி நிதி உதவியுடன் செயல்படுத்தப்படும் திட்டமாகும். இத்திட்டத்தில் (தேவையைப் பொறுத்து மண்டல மாவட்ட வட்டார அளவில்) பண்ணைசார் தொழில்கள் (Farm and Off farm activities),  பண்ணை சாரா தொழில்கள் (Non-Farm activities),  குழுத்தொழில்கள் மற்றும் தனிநபர் தொழில்களை மேம்படுத்திடும் வகையில், ஒப்பந்த முறையில் பணிபுரிந்திட தொழில்நுட்ப ஆலோசகர்கள்(Consultant) தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவினர் (Technical Advisory Group) களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 


இப்பணிக்கு தேவையான கல்வித்தகுதி, பணி அனுபவம், நிபந்தனைகள் மற்றும் இதர விபரங்கள் அனைத்தும் https://www.tnrtp.org  என்கிற வலைதளத்தில் உள்ளது.

🖱 அமைச்சர் உதயநிதிக்கு எந்த துறை சரியாக இருக்கும்...? - யோசனை கூறிய அண்ணாமலை

மேற்படி பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் மேற்ச்சொன்ன இணையதள முகவரியில் வருகிற டிசம்பர் 27ஆம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்கலாம். 

மேலும் பிறவிபரங்களுக்கு  0416-2900545  என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர்  திரு.பெ.குமாரவேல் பாண்டியன்,இ.ஆ.ப., அவர்கள்  தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு : செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்,  லூர்மாவட்டம்.





No comments

Thank you for your comments