Breaking News

மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இலவச வேட்டி சேலை அரிசி வழங்கல்

 கோவை :

முன்னாள் அமைச்சரும் அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ். பி.வேலுமணி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட100 க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த  மக்களுக்கு இலவச வேட்டி, சேலை மற்றும் வீட்டிற்கு தேவையான மளிகை பொருட்களையும், அரிசிகளையும்  வழங்கினார்.



கோவையில் பெய்த மழையில் கோவை மாவட்டம் முழுவதும் வெள்ளைக்காடாக காட்சியளித்த சம்பவம் கோவை மக்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. மேலும் பல இடங்களிலும் பொதுமக்கள் அரசுக்கு எதிராகவும், மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

🖱 நிறைய அமைச்சர்களுக்கு வாய்கோளாறு... 

பட்டியலிட்டு பங்கம் செய்த பாஜக அண்ணாமலை

 இந்த நிலையில் கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தொண்டாமுத்தூர், புத்தூர் பகுதியில் மழை வெள்ளம் புகுந்து குடியிருக்க முடியாமல் பாதிக்கப்பட்ட 100க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த  மக்களை நேரில் சந்தித்து பாதிப்புகளை ஆய்வு செய்து, ஆறுதல் தெரிவித்து இலவச வேட்டி, சேலை, மற்றும் அத்தியாவசிய மளிகை பொருட்கள் மற்றும் அரிசிகளை  வழங்கினார்.


No comments

Thank you for your comments