புதிய தேசிய கல்விக்கொள்கை விரைவில் அனைவரும் ஏற்றுக்கொள்வர்... ஆளுநர் ஆர்.என்.ரவி
கோவை :
அவினாசிலிங்கம் பல்கலையில், இந்திய பல்கலை கூட்டமைப்பு ஆதரவுடன் கல்வி மற்றும் மேம்பாட்டு மையம் துவக்க விழா நடைபெற்றது.
இந்நிகழ்வில், ஆளுநர் ரவி காணொளி வாயிலாக பங்கேற்று பேசியதாவது:
கல்வி முறை என்பது சமூகம், நாட்டின் வளர்ச்சியை மையமாக கொண்டு இருக்க வேண்டும். தற்போது, நாம் பின்பற்றும் கல்விமுறை பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் விட்டுச் சென்றவையே..!
60 மற்றும் 80ம் ஆண்டுகளில் கொண்டு வரப்பட்ட புதிய கல்விக்கொள்கையும் அதை தழுவியே இருந்தது.
தற்போது கொண்டுவரப்பட்டுள்ள புதிய தேசிய கல்விக்கொள்கை, கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் என, அனைத்து தரப்பினரின் முயற்சியில், நாட்டின் எதிர்காலத்தை மையமாக கொண்டு சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதை, பெரும்பாலானோர் ஏற்றுள்ள போதும், ஒரு சிலர் ஏற்கவில்லை. விரைவில் அனைவரும் ஏற்றுக்கொள்வர்; ஏனெனில் இக்கொள்கை, தனிப்பட்ட கட்சியோ, பிற ஆன்மிகம் சார்ந்தோ வடிவமைக்கப்ப டவில்லை.
நம் நாடு பொருளாதார பன்பாடு, ஆன்மிக ரீதியாக முன்னேற உறுதுணையாக இருக்கும். விவேகானந்தர் கனவு கண்ட புதிய பாரதத்தை மையமாக கொண்டு உருவாக்கப்பட் டுள்ளது. தொழில்நுட்ப ரீதியாக பல்வேறு மாற்றங்களையும், வளர்ச்சிகளையும் சந்தித்துள்ளோம்.
இந்நிலையில் மாணவர்கள், பொதுமக்கள் தொழில்நுட்ப அறிவாற்றலுடன் இருப்பது அவசியம் புதிய பாரதத்தை வடிவமைப்பதில் ஆசிரியர்களின் பங்களிப்பு மகத்துவமானது நவீன கற்றல், கற்பித்தல் முறைக்கு தங்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.
தேசிய புதிய கல்விக் கொள்கையின் படி, ஒரே கல்வி முறையாக அமையும் போது வேற்றுமையில் ஒற்றுமை மேலும் வலு சேர்க்கும் என ஆளுநர் ரவி உரையாற்றினார்.
இவ்விழாவில் பல்கலை வேந்தர் தியாகராஜன் தலைமை வகித்தார். இந்தி துறை பேராசிரியர் சாந்தி எழுதிய, 'தமிழ் சித்தர்' என்ற நூலும், ஆய்வு மைய இயக்குனர் லலிதா எழுதிய, ஆராய்ச்சி ஆலோசனை வளம் என்ற நூலும் வெளியிடப்பட்டது.
இந்நிகழ்வில் இந்திய பல்கலை கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் பங்கஜ்மிட்டல், அவினாசிலிங்கம் கல்வி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் மீனாட்சி சுந்தரம், பல்கலை துணைவேந்தர் பாரதி ஹரிசங்கர், முன்னாள் வேந்தர் குழந்தை வேலு பதிவாளர்கள் கவுசல்யா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

.jpg)
.jpg)
No comments
Thank you for your comments