அக்டோபர் மாதத்தில் 98 வாகனங்களுக்கு – பதினொன்றரை இலட்ச ருபாய் அபராதம்
“அக்டோபர் மாதத்தில் 98 வாகனங்களுக்கு – பதினொன்றரை இலட்ச ருபாய் அபராதம்” காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலக மோட்டார் வாகன ஆய்வாளர் கா.பன்னீர்செல்வம் நடவடிக்கை எடுத்துள்ளார்.
காஞ்சிபுரம் வட்டரபோக்குவரத்து மோட்டார் வாகன ஆய்வாளர் கா.பன்னீர்செல்வம் அவர்கள் நவம்பர் மாதம் 2022-ம் வருடம் காஞ்சிபுரம், வாலஜபாத் மற்றும் உத்திரமேரூர் பகுதிகளில் வாகன தணிக்கையில் சுமார் 1250 வாகனங்களை தணிக்கை செய்து 98 வாகனங்களுக்கு அபராதம் விதித்தார் இதில் ரூபாய் 1,24,200/- (மூன்று லட்சத்து முப்பத்து ஐந்தாயிரம்) உடன் இணக்கக்கட்டண வசூலாகவும் (ஸ்பாட் பைன்), ரூபாய் 10,23,000/- (பத்து லட்சத்து இறுபத்து மூன்றாயிரம்) இணக்கக்கட்டணம் மற்றும் வரி வசூல் இலக்காகவும் நிர்ணயம் செய்தும் ஆக மொத்தம் ரூபாய் 11,47,200/- (பதினோரு இலட்சத்து நாற்பத்து ஏழாயிரத்து இருனூறு) அபராதத்தை அரசுக்கு ஈட்டி கொடுத்து நடவடிக்கை எடுத்துள்ளார்.
இதில் 24 வாகனங்கள் தகுதிச்சான்று (எப்.சி), அனுமதிசீட்டு (பெர்மிட்), சாலைவரி (ரோடு டாக்ஸ்) போன்ற குற்றங்களுக்காக சிறை பிடிக்கப்பட்டு அருகேயுள்ள காவல் நிலையங்கள் மற்றும் காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலக வளாகத்திலும் நிறுத்தப்பட்டது.
தணிக்கை அறிக்கை வழங்கப்பட்ட 98 வாகனங்களில் கீழ்க்கண்ட குற்றங்கள் குறிப்பிடப்படக்கூடியவையாகவும் சாலை பாதுகாப்பு அம்சங்கள் கொண்டதாகவும் குறிப்பிடலாம்.
1) சரக்கு வாகனத்தில் அதிக பாரம் ஏற்றியது – 12
2) ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனத்தை இயக்கியது – 27
3) தலைகவசம் இல்லாமல் வாகனத்தை இயக்கியது – 32
4) காப்புசான்று இல்லாமல் வாகனத்தை இயக்கியது – 24
5) செல்போன் பேசியபடி வாகனத்தை இயக்கியது – 11
6) அதிவேகமாக வாகனத்தை இயக்கியது – 15
7) 18 வயதிற்கு குறைந்த சிறார் வாகங்களை இயக்கியது – 4
8) பின்புறம் பார்க்கும் கண்ணாடிகள் இல்லாமல் இயக்கியது – 6
9) அதிக ஒலி எழுப்பும் ஒலிப்பான்கள் உபயோகித்தது – 5
10) சீருடை இல்லாமல் வாகனத்தை இயக்கியது – 19
குறிப்பாக கடந்த மாதம் ஸ்ரீபெரும்புதூர் சுங்க சாவடி அருகே அதிவேகமாக செல்லுகின்ற வாகனங்கள் தணிக்கை செய்து 15 வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
நம் உயிர் மூச்சு..... முதல்வர் மு.க ஸ்டாலின் பேச்சு
மேலும் அலுவலகத்திற்கு பலதரப்பட்ட பணிகளுக்காக வரும் பொதுமக்களை ஒருங்கிணைத்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு விளக்க வகுப்புகளை காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் கடந்த நவம்பர் மாதத்தில் மட்டும் 625 நபர்களுக்கு ஏற்படுத்தப்பட்டது.
.jpg)
.jpg)
No comments
Thank you for your comments