Breaking News

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பள்ளி கல்வித்துறை சார்பில் கலைத் திருவிழா போட்டிகள்

காஞ்சிபுரம் :

காஞ்சிபுரம்  மாவட்டம்,  பள்ளி கல்வித்துறை  சார்பில்  கலைத் திருவிழா 2022-2023  நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித் தலைவர்  டாக்டர் மா.ஆர்த்தி  இ.ஆ.ப,  அவர்கள்  கலந்து கொண்டு,  குத்துவிளக்கு ஏற்றி   இன்று  (06.12.2022)  துவக்கி வைத்தார்கள்.


தமிழ்நாடு  முழுவதும்  பள்ளிக்கு கல்வித் துறையின்  கீழ்  இயங்கி  வரும்  அரசு நடுநிலை,  உயர்நிலை மற்றும்  மேல்நிலைப்  பள்ளிகளில்  பயிலும்  அனைத்து  மாணவ  மாணவிகளும்  பங்கேற்கும் வகையிலான கலை  நிகழ்ச்சிகள் கலைத்  திருவிழாவாக பள்ளி அளவில்  26.11.22  முதல் 28.11.22  வரை நடைபெற்றன. அவ்வகையில் காஞ்சிபுரம்  மாவட்டத்தில் உள்ள  52  மேல்நிலைப்  பள்ளிகள்  

50 உயர்நிலைப்  பள்ளிகள் மற்றும் 116  நடுநிலைப் பள்ளிகளில்  கலைத் திருவிழா  போட்டிகள் மிகச் சிறப்பாக நடத்தப்பட்டன.

ஆறாம்  வகுப்பு  முதல்  எட்டாம்  வகுப்பு  வரை  பயிலும்  மாணவர்களுக்கு 36  வகையான போட்டிகளும்,  ஒன்பதாம் வகுப்பு  முதல்  பத்தாம்  வகுப்பு  வரை  பயிலும்  மாணவர்களுக்கு 78 வகையான போட்டிகளும், 11  மற்றும் 12 ஆம்  வகுப்பு  மாணவர்களுக்கு  82  வகையான  போட்டிகளும்   நிர்ணயிக்கப்பட்டன.

 காஞ்சிபுரம்  மாவட்டத்தில்  உள்ள  அரசு  நடுநிலை  உயர்நிலை  மேல்நிலை  பள்ளிகளில்  பயிலும்  60 ஆயிரத்து  681  மொத்த மாணவர்களில்  46 ஆயிரத்து  191  மாணவர்கள் பள்ளி  அளவில்  நடைபெற்ற கலைத் திருவிழா நிகழ்வில் பங்கேற்றனர் என்பது  இந்நிகழ்வின் சிறப்பு ஆகும்.

பள்ளி அளவில் ஒவ்வொரு பிரிவிலும்  முதலிடம்  பெற்ற மாணவர்கள் கிட்டத்தட்ட  19,292 மாணவர்கள்,  வட்டார  அளவில்  நடத்தப்பட்ட  போட்டிகளில்  கலந்து  கொண்டனர்.  

காஞ்சிபுரம், உத்திரமேரூர்,  வாலாஜாபாத்,  திருபெரும்புதூர்  மற்றும்  குன்றத்தூர்  ஆகிய  ஐந்து  வட்டாரங்களில் 29.11.22  முதல் 3.12.22  வரை  வட்டார  அளவில் போட்டிகள்  நடத்தப்பட்டு  ஆறு  வகையான போட்டிகளில் மொத்தம்  3 ஆயிரத்து  79 மாணவர்கள்  தேர்ந்தெடுக்கப்பட்டனர்.  தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள்  இன்று  மாவட்ட  அளவிலான  போட்டிகளில்  கலந்து  கொண்டு,  இந்த போட்டிகளில் வெற்றி  பெறும்  மாணவர்கள்  அடுத்து  மாநில  அளவில்  நடைபெற  உள்ள  போட்டியில் கலந்து கொள்ள உள்ளனர்.

பதவி வரும் போகும் கழகம் தான் நம் அடையாளம்...
நம் உயிர் மூச்சு.....   முதல்வர் மு.க ஸ்டாலின் பேச்சு

இந்நிகழ்வில்  காஞ்சிபுரம்  சட்டமன்ற  உறுப்பினர்  திரு சி .வி. எம். பி .எழிலரசன்,  காஞ்சிபுரம் மாநகராட்சி  மேயர்  மகாலட்சுமி  யுவராஜ்,  மாவட்ட முதன்மை  கல்வி  அலுவலர்  திருமதி வெற்றிச்செல்வி,  காஞ்சிபுரம் ஒன்றியக்குழு தலைவர்  திருமதி  மலர்கொடி குமார்,  உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மற்றும் மாணவ  மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

வெளியீடு : செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.

No comments

Thank you for your comments