மேலூர் அருகே மணலை மலை போல் குவித்து வழிபடும் பாரம்பரிய திருவிழா ஆயிரக்கணக்கில் பக்தர்கள் பங்கேற்பு
மதுரை மாவட்டம் மேலூர் அருகே நரசிங்கம்பட்டி கிராமம் உள்ளது,இங்குள்ள பெருமாள்மலை அடிவாரத்தில் பிரசித்தி பெற்ற மலைக்கோவில் ஒன்று உள்ளது.
இங்கு ஆண்டுதோறும் கார்த்திகை தினத் தன்று மணலை மலை போல குவித்து அதை வணங்கி வழிபடும் வினோத திருவிழா நடத்துவதை இப்பகுதியினர் வழக்கமாக கொண்டுள்ளனர்,
நேற்று நடைபெற்ற இந்த திருவிழாவிலும் வழக்கம் போலவே பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்,
உருவ வழிபாடு கிடையாது.சுற்றுச்சுவர் எதுவும் இன்றி திறந்த வெளியில் இந்த கோவில் அமைந்துள்ளது.
இங்கு பெருமாள் அவதரித்ததாக தெரிவிக் கும் பக்தர்கள் அங்குள்ள படிக்கட்டுகளுக்கு மலர்மாலைகளை சாத்தி பய பக்தியுடன் வழிபாடு நடத்துகின்றனர்,
கோவில் முன்பாக சேங்கை எனப்படும் தீர்த்தகுளம் ஒன்று உள்ளது,சாமி கும்பிடு வதற்கு முன்பாக பக்தர்கள் நேற்றிகடனாக முடி காணிக்கை செலுத்தி குளத்தில் தீர்த்த மாடி சேங்கையிலிருந்து மணலை கையில் அள்ளி அதனுடன் உப்பு பொட்டுலத்தையும் உடன் எடுத்து வந்து குளத்தின் கரையில் உள்ள இந்த மணல் மலை மீது போடுகின்ற னர்,
அவ்வாறு மூன்று முறை குளத்தில் இருந்து மணல் அள்ளி வந்து மணல் மலை மீது போட்டால் தாங்கள் நினைத்தது நிறைவேறும் எனவும்,மேலும் மழை பொழிந்து விவசாயம் செழிக்கும் என்பதும் இப்பதியினரின் ஐதீக மாகும்,
அதன்படி இந்த கோவிலுக்கு வரும் பக்தர்கள் அள்ளிப் போட்ட மணல் தற்பொழுது சுமார் 50 அடிக்கு மேல் பெரிய மலை போல உயர்ந்து காட்சி தருகிறது,
முத்தாய்பாக பக்தர்களால் உருவான இந்த மணல் மலை இன்று வரை புயல், மழை, வெள்ளம் என எந்த ஒரு இயற்கை சீற்றத்தா லும் கரையாமல்,சிறிதும் சிதிலமடையாமல் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது ஆகும்,
இத்திருவிழாவையொட்டி கோவில் பகுதி முழுவதும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டி ருந்தன,வழக்கப்படி நேற்று இரவு வெள்ளி மலையில் உள்ள கொண்டைகல் எனும் இடத்தில் கார்த்திகை ஜோதி ஏற்றப்பட்டது அதனை தொடர்ந்து மலையை சுற்றியுள்ள சுமார் 60 க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள வீடுகளில் கார்த்திகை தீபம் ஏற்றி வழிபாடு கள் நடத்தப்பட்டன.
.jpg)

No comments
Thank you for your comments