ஏலசீட்டு நடத்தி மோசடி... 7 வருடங்களாக தலைமறைவாக இருந்த இருவர் கைது
திருவள்ளூர்
திருவள்ளூர் மாவட்டம் 2015 ஆண்டு S. முருகையன் (68) என்பவர் சென்னை காவல் ஆணையாளர் அவர்களிடம் கொடுத்த புகாரில் தான் வசிக்கும் பகுதியில் குடியிருந்து வரும் ரூபி என்ற முருகன் அவருடைய மனைவி நிர்மலா என்பவர்கள் வடக்கு பஜாரில் சலூன் கடை வைத்து நடத்தி வந்ததாகவும் அவர்கள் எண். 13, அண்ணா தெரு, காமராஜர் தெரு, பட்டாபிராம் சென்னை 72 என்ற முகவரியில் குடும்பத்தோடு சுமார் 20 ஆண்டுகளாக அதே பகுதியில் வசித்து வந்ததாகவும் அவர்கள் இருவரும் சுமார் 5 ஆண்டுகளாக ஏலச்சீட்டு நடத்தி வந்ததாகவும் அந்த அடிப்படையில் அவர்களிடம் 5 லட்சம் ரூபாய் சீட்டில் தனது பெயரில் ஒருசீட்டும் தன்னுடைய மகன் பெயரில் ஒரு சீட்டும் ஆக இரண்டு சீட்டுகளாக 10 லட்சம் ரூபாய் கட்டி வந்ததாகவும் அந்த சீட்டு 10.12.2015 ம் தேதியில் முடிந்தும் இதுவரையில் தனக்கு சீட்டு பணத்தை தரவில்லை என்றும், அதேபோன்று தங்கள் பகுதியில் உள்ள சுமார் மொத்தம் 20 நபர்கள் அந்த சீட்டில் சேர்ந்து உள்ளதாகவும் தங்கள் அனைவருக்கும் சீட்டு பணம் தராமல் ஏமாற்றி வருவதாகவும், தாங்கள் கட்டியசீட்டு பணத்தை ஏமாற்றிய நபர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க கோரி கொடுத்த புகார் அளித்தனர்
இந்த புகாரின் பெயரில் குற்றப்பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டு திரு. பாலன் ஆய்வாளர் அவர்களால் புலன்விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
ஆவடி காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் அவர்களின் உத்தரவுப்படி சீட்டு மற்றும் கந்து வட்டி தடுப்பு பிரிவு ஆய்வாளர் பாலன் மேற்படி வழக்கில் சம்மந்தப்பட்ட நபர்களை பிடிக்க உரிய நடவடிக்கை மேற்கொண்டனர்.
🖱 நிறைய அமைச்சர்களுக்கு வாய்கோளாறு...
பட்டியலிட்டு பங்கம் செய்த பாஜக அண்ணாமலை
கடந்த 7 வருடங்களாக தலைமறைவாக இருந்த இவ்வழக்கில் சம்மந்தப்பட்ட நபர் P.ரூபி (எ) முருகன் (52) நிர்மலா, (46)ஆகியோரை 16.12.2022 ம் தேதி பெங்களூர் ஜீவன் பிமா நகரில் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார்கள்.
ஆவடி மத்திய குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் மற்றும் தனிப்படையினரின் மெச்சதகுந்த இந்த பணியிணை ஆவடி காவல் ஆணையாளர் அவர்கள் வெகுவாக பாராட்டினார்கள்.


No comments
Thank you for your comments