இரு சக்கர வாகணம் திருடியவர் கைது
திருவள்ளூர் :
திருவள்ளூர் மாவட்டம் கடந்த 14.12.2022-ம் தேதி T-10 திருமுல்லைவாயல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருமுல்லைவாயில் ரயில் நிலையம் அருகே நிறுத்திவைக்கப்பட்டிருந்த தனது TN-13 9003 என்ற பதிவெண் கொண்ட Hero Honda Dio இருசக்கர வாகனத்தை காணவில்லை என்று திருமுல்லைவாயல், செந்தில் நகரை சேர்ந்த திரு, கோனட்டி ரவி என்பவர் கொடுத்த புகாரின் பேரில் திருமுல்லைவாயல் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது
ஆவடி, திருமுல்லைவாயல், அண்ணனுார் ஆகிய ரயில் நிலையங்களுக்கு அருகில் பொதுமக்களால் நிறுத்தி வைக்கபட்டிருக்கும் இருசக்கர வாகனங்கள் திருடப்பட்டு வந்ததன் பெயரில் மேற்படி திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வரும் குற்றவாளிகளை பிடிக்க ஆவடி காவல் ஆணையாளர் சந்திப்ராய் ராத்தோர் அவர்களின் உத்தரவின் பெயரில் ஆவடி காவல் துணை ஆணையாளர் மகேஷ் அவர்களின் நேரடி மேற்பார்வையில், ஆவடி சரக உதவி ஆணையாளர் புருஷேத்தமன் அவர்களின் தலைமையில், திருமுல்லைவாயல் நிலைய காவல் ஆய்வாளர் விஜயராகவன், குற்றப்பிரிவு ஆய்வாளர் கிருஷ்ணகுமார் மற்றும் ஆவடி காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் அருணாசலராஜா ஆகியோர் கொண்ட தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
மேற்படி எதிரியை தேடி வந்த நிலையில் 15.12.22-ம் தேதி அயப்பாக்கம், திருவேற்காடு மெயின் ரோட்டில் உள்ள வள்ளி பேலஸ் அருகே மேற்படி தனிப்படையினர் வாகன தணிக்கையில் இருந்த போது TN-13 9003 என்ற பதிவெண் கொண்ட Hero Honda Dio இருசக்கர வாகனத்தில் வந்த நபரை மடக்கி பிடித்து விசாரிக்க அந்த நபரின் பெயர் கணபதி, வயது 40 த/பெ. துரை, கரிவேடு கிராமம், ஓச்சேரி, ராணிபேட்டை மாவட்டம் என்று தெரியவந்தது.
🖱 நிறைய அமைச்சர்களுக்கு வாய்கோளாறு...
பட்டியலிட்டு பங்கம் செய்த பாஜக அண்ணாமலை
விசாரணையில் கடந்த சில வருடங்களாக ஆவடி, திருமுல்லைவாயல், அண்ணனுார், கோடம்பாக்கம், கூடுவாஞ்சேரி, மறைமலைநகர் ஆகிய இடங்களில் உள்ள ரயில் நிலையங்களுக்கு அருகில் பொதுமக்களால் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் இருசக்கர வாகனங்களை திருட்டு சாவிகள் போட்டு இருசக்கர வாகனங்களை திருடி சென்றுள்ளது தெரியவந்தது.
மேற்படி நபரிடமிருந்து 45 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அவற்றின் மதிப்பு சுமார் 35 லட்சம் ஆகும். இவர் மீது ஏற்கனவே காவேரிபாக்கம் மற்றும் சேலையூர் ஆகிய காவல் நிலையங்களில் இருசக்கர வாகன திருட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டு அவற்றில் கைது செய்யப்பட்டு சிறை சென்றுள்ளது தெரியவந்துள்ளது இவரை பிடித்து சிறையில் அடைத்தனர்


No comments
Thank you for your comments