மேலூர் அருகே மத நல்லிணக்க விழாவாக நடைபெற்ற புதிய பள்ளிவாசல் திறப்புவிழா
மதுரை:
மதுரை மாவட்டம், மேலூர் அருகே உள்ள கருங்காலக்குடி பேட்டை பகுதியில் இஸ்லாமி யர்களின் புதிய தொழுகை பள்ளிவாசல் திறக்கப்பட்டது,இது அப்பகுதியினர் காலம், காலமாக கடைபிடித்து வரும் இந்து-முஸ்லிம் ஒற்று மையை உலகிற்கு எடுத்து சொல்லும் வகையில் ஒரு மத நல்லிணக்க விழாவாக நடைபெற்றது என்றால் அது நிச்சயம் மிகையாகாது.
பேட்டைபகுதியில் கடந்த பல ஆண்டுகளாக சிறிய கட்டிடத்தில் இயங்கி வந்த பள்ளிவாசல் ஜமாத்,மற்றும் தனியார்களது பங்களிப்போடு நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் பணிகள் தொடங்கப்பட்டு முழுமையாக பணிகள் முடி வுற்ற நிலையில் நேற்று திறப்பு விழா நடை பெற்றது.
பேட்டை ஜமாத் தலைவர் இப்ராகிம்சா தலைமை வகித்தார். செயலாளர் முகமது காசிம்,பொருளாளர் முகமது ரியாஸ் வரவேற்றனர். சிங்கப்பூர் தொழில் அதிபர் அப்துல் ஜலீல் பள்ளி வாசலைத் திறந்து வைத்தார்.
🖱 நிறைய அமைச்சர்களுக்கு வாய்கோளாறு...
பட்டியலிட்டு பங்கம் செய்த பாஜக அண்ணாமலை
மேலும் விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக நூர்தீன், அப்துல் அஜிஸ், ஜபார், பக்கீர் முகமது, முகம்மது ரபீக், மருத்துவர்கள் அம்சத் அலி, முகமது இஸ்மாயில்,ஆகியோரும்,மற்றும் மதநல்லிணக்கத்தை போற்றும் வகையில் கருங்காலக்குடி கிராமத்தின் தலைவர் வழக்கறிஞர் ராஜேந்திரன்,கிராம நிர்வாகிகள் மோகன், சண்முகவேல், ராஜேந்திரன் உட்பட பிற சமுதாயத்தை சேர்ந்த முக்கியஸ்தர்கள் பெருமளவில் வந்து கலந்து கொண்டனர், இந்து முஸ்லிம் ஒற்றுமையை வலியுறுத்தி மத நல்லிணக்கத்தை போற்றும் வகையில் சகோதர உணர்வோடும்,உரிமையோடும் பங்கேற்று சிறப்பு சேர்த்த அவர்களை இஸ்லாமியர்கள் வாசல் வரை சென்று வரவேற்றனர்,இது அப்பகுதியில் மூதாதையர்கள் காலம் தொட்டு இன்றுவரை தொடரும் இந்து முஸ்லிம் ஒற்று மையை வெளி உலகிற்கு எடுத்துச் சொல்லும் ஒரு இனிய நிகழ்வாகவும்,வெளியூரிலிருந்து வந்தவர்கள் வியந்து பாராட்டும் வகையிலும் அமைந்தது,
திறப்பு விழாவை முன்னிட்டு பள்ளி வாசலின் முன்பாக அமைக்கப்பட்டிருந்த பந்தலில் 5000 பேருக்கு அசைவ பிரியாணி விருந்து உபசரிப் பும் நடைபெற்றது,விழாவிற்கான ஏற்பாடு களை ஜமாத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் முத்தலிபு,ஷாஜகான், கட்டுமாணக் குழு நிர்வாகிகள் முகமது முபாரக்,பொறியாளர் பக்ருதீன் அலி அகமத் ஆகியோர் செய்திருந்தனர்.



No comments
Thank you for your comments