சோனியா காந்தியின் 77-வது பிறந்த நாளை முன்னிட்டு காமராஜரின் பேத்தி அன்னதானம்
ஸ்ரீபெரும்புதூர்
ஸ்ரீபெரும்புதூரில் சோனியா காந்தியின் 77-வது பிறந்த நாளை முன்னிட்டு காமராஜரின் பேத்தி அன்னதானம் வழங்கினார்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தியின் 77- வது பிறந்தநாள் விழா காங்கிரஸ் கட்சி சார்பில் பல்வேறு பகுதிகளில் கொண்டாடப்பட்டு வருகிறது.
அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் நகர காங்கிரஸ் கட்சி சார்பில் பிறந்தநாள் விழா ஸ்ரீபெரும்புதூர் பேருந்து நிலையத்தில் கொண்டாடப்பட்டது.
நகர தலைவர் எஸ்.ஏ. அருள்ராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் காமராஜரின் தம்பி மகள் வழி பேத்தி மாநில செயலாளர் கமலிகா காமராஜ் கலந்து கொண்டு ஏழை எளிய மக்களுக்கு இனிப்புகள் மற்றும் அன்னதானம் வழங்கினார்.
முன்னதாக ராஜீவ் காந்தி நினைவிடம் அருகே உள்ள இந்திரா காந்தியின் சிலைக்கு கமலிகா காமராஜ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதில் எஸ்சி எஸ்டி பிரிவு மாவட்ட தலைவர் தங்கராஜ் வட்டாரத் தலைவர் நிக்கோலஸ், மாவட்ட பொதுச் செயலாளர் எஸ்சி எஸ்டி துறை வடகால் பாண்டியராஜ், வட்டார இளைஞரணி தலைவர் ஞானசேகர், உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் பலர் உடன் இருந்தனர்.



No comments
Thank you for your comments