100 ஆண்டுகள் பழமையான வேப்பமரம் சாலை நடுவே சாய்ந்து போக்குவரத்து பாதிப்பு
மாண்ட்ஸ் புயல் காரணமாக டவுன் பேங்க் அருகே பிரதான சாலையில் நூறாண்டு கால பழமையான வேப்பமரம் சாய்ந்தது, தீயணைப்பு துறையினர் துரித நடவடிக்கை.....
காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட பேருந்து நிலையம் பின்புறம் நுழைவாயில் அருகே நகர கூட்டுறவு வங்கி உள்ளது.
மாண்டஸ் புயல் காரணமாக நேற்று மாலை முதல் லேசான சாரை மழை பெய்த நிலையில் இரவு முழுவதும் குளிர் காற்று வீசியது.
இந்த நிலையில் இன்று காலை 100 ஆண்டுகள் பழமையான வேப்பமரம் தொடர் மழை மற்றும் காற்று வீசியதால் சாலை நடுவே சாய்ந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்து விரைந்து வந்த காஞ்சிபுரம் மாவட்ட தீயணைப்பு துறை அலுவலர்கள் துரிதமாக செயல்பட்டு 15 நிமிடங்களுக்குள் சாலையில் விழுந்த மரத்தை அகற்றி போக்குவரத்து பாதிப்பு ஏற்படாத வண்ணம் விரைந்து செயல்பட்டனர்.
மேலும் மரம் விழும்போது அருகில் யாரும் இல்லாத காரணத்தினால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.
மாண்டஸ் புயலால் சாலையில் விழுந்த பழமையான மரத்தை போக்குவரத்து பெருமளவு பாதிப்பு ஏற்படும் முன் துரிதமாக செயல்பட்டு அகற்றிய காஞ்சிபுரம் தீயணைப்பு துறை அலுவலர்களுக்கு பல தரப்பினர் வெகுவாக பாராட்டு.

.jpg)

No comments
Thank you for your comments