Breaking News

கே.எம்.சி.ஹெச்-ன் 26ஆம் ஆண்டு புற்றுநோய் சிகிச்சை விழிப்புணர்வு மாரத்தான்

கே.எம்.சி.ஹெச்-ன் 26ஆம் ஆண்டு கோவை மாரத்தான் “புற்றுநோயுடன் யாரும் தனியாகப் போராடுவதில்லை என்ற மையக் கருத்துடன் புற்றுநோய் சிகிச்சை விழிப்புணர்வு மாரத்தான் நடைபெற்றது.


புற்றுநோய் சிகிச்சை விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கோவையின் முன்னணி மருத்துவமனையான கேஎம்சிஹெச் மருத்துவமனை கோவை மாரத்தான் நிகழ்ச்சியை நடத்தியது..


கோயில்கள் சிலரின் தனிப்பட்ட சொத்து அல்ல..  
ரூ.3,700 கோடி கோயில் சொத்துகள் மீட்பு.. முதல்வர் பேச்சு!

 டிசம்பர் 4-ம் தேதியன்று கோவையில் 26-ஆம் ஆண்டின் கோவை மாராத்தான் நிகழ்ச்சியை கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்  வி. பத்ரிநாராயணன் அவர்கள் கொடியசைத்து துவக்கிவைத்தார். இதில் புற்றுநோயில் இருந்து மீண்டவர்கள்,  மருத்துவர்கள், மருத்துவதுறை சார்ந்தவர்கள், செவிலியர்கள், மாணவர்கள் உட்பட 4000-க்கும் அதிகமானோர் கலந்துகொண்டனர்.

18 கிலோ மீட்டர் தொலைவிலான இந்த மாரத்தான் கேஎம்சிஹெச் கோவில்பாளையம் மருத்துவமனையில் துவங்கி அவினாசி ரோடு கேஎம்சிஹெச் மருத்துவமனையில் நிறைவுற்றது.

அதுசமயம் உரையாற்றிய கேஎம்சிஹெச் மருத்துவமனை தலைவர் டாக்டர் நல்லா ஜி பழனிசாமி அவர்கள் கூறுகையில், கோவையில் கேஎம்சிஹெச் சார்பாக முதல் மாராத்தான் 1991-ல் நடைபெற்றது. பல்வேறு நோய்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இதுபோன்ற மாரத்தான்கள் நடத்துகிறோம். 

புற்றுநோயை குணப்படுத்துதல் தொடர்பாக இம்முறை இந்த மாராத்தான் நடைபெறுகிறது. இம்முறை  இதன் கருத்தாக்கம்#39; புற்றுநோயுடன் யாரும் தனியாக போராடுவதில்லை என்பதாகும்.  

அதாவது புற்றுநோயை வெற்றிகொள்ள அனைவரது பங்களிப்பும் அவசியம் என்பது இதன் மையக்கருத்தாகும்.

புற்றுநோயை ஏற்படுத்தும் அறிகுறிகளை முன்னதாகவே துல்லியமாகக் கண்டறியும் அதிநவீன மருத்துவ வசதிகள் கேஎம்சிஹெச்-ல் உள்ளன, அத்தகைய தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து இந்த நிகழ்ச்சி வலியுறுத்துகிறது.

கேஎம்சிஹெச் மருத்துவமனையில் சமீபத்தில் புற்று நோய் சிகிச்சைக்காக இந்தியாவிலேயே முதன்முறையாக ஹைபர் ஆர்க் என்ற கருவி அறிமுகப்படுத்தப்பட்டது.

இதன்மூலம் ஆயிரக்கணக்கான நோயாளிகள் நல்ல பலன்பெற்றுள்ளனர். ஆகவே புற்றுநோய் என்றாலே பயம் கொள்ளத் தேவையில்லை. ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால் புற்று நோயை முழுமையாக குணப்படுத்திவிட முடியும் என்று தெரிவித்தார்.

மாராத்தான் நிகழ்ச்சியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுத் தொகையும் கலந்துகொண்டவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கபட்டன.

No comments

Thank you for your comments