50 வகையான விளையாட்டுப் போட்டிகள் அறிவிப்பு... பங்கேற்க அழைப்பு
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்டம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க வீரர்/வீராங்கனைகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.மா.ஆர்த்தி அழைப்பு விடுத்துள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், காஞ்சிபுரம் சார்பாக, பொதுப்பிரிவு, பள்ளி, கல்லூரி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் அரசு ஊழியர்கள் ஆகிய ஐந்து பிரிவுகளில் ஆண்/பெண் இருபாலரும் பங்கேற்கும் வகையில் மாவட்ட அளவில் 42 வகையான போட்டிகளும், மண்டல அளவில் 8 வகையான போட்டிகளும் என 50 வகையான போட்டிகள் 2023 ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் காஞ்சிபுரம், பேரறிஞர் அண்ணா மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடத்தப்படவுள்ளது.
இது தொடர்பாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.மா.ஆர்த்தி தெரிவிக்கையில்,
போட்டிகளில் கலந்துகொள்ள விரும்பும் விளையாட்டு வீரர்/வீராங்கனைகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதள www.sdat.tn.gov.in மஎன்ற முகவரியில் வீரர்களின் குழு மற்றும் தனி நபர்களின் அனைத்து விவரங்களை பதிவு செய்திட கேட்டுக்கொள்ளப்படுகிறது.
நடைபெறும் போட்டிகள்:
பொதுப்பிரிவு (15 முதல் 35 வயது) ஆண்கள் / பெண்கள்
1. கபடி, 2. சிலம்பம் 3. தடகளம் 4. இறகுப்பந்து 5. கையுந்து பந்து.
பள்ளி மாணவ / மாணவியர்கள் (12 முதல் 19 வயது)
1 கபடி, 2. சிலம்பம் 3. தடகளம் 4. கூடைப்பந்து 5. ,இறகுப்பந்து 6. ,கால்பந்து 7. வளைகோல் பந்து 8. நீச்சல் 9. கையுந்து பந்து 10. மேசைப்பந்து.
மண்டல அளவில் – பள்ளி மாணவ / மாணவியர்கள் (12 முதல் 19 வயது)
1. டென்னிஸ் 2. பளு தூக்குதல் 3. கடற்கரை கையுந்துபந்து .
கல்லூரி மாணவ / மாணவியர்கள் (17 முதல் 25 வயது)
1. கபடி 2. சிலம்பம் 3. தடகளம் 4. கூடைப்பந்து 5.இறகுப்பந்து 6.கால்பந்து
7. வளைகோல் பந்து 8. நீச்சல் 9. கையுந்து பந்து 10. மேசைப்பந்து.
மண்டல அளவில் - கல்லூரி மாணவ / மாணவியர்கள் (17 முதல் 25 வயது)
1. டென்னிஸ் 2. பளு தூக்குதல் , 3. கடற்கரை கையுந்துபந்து.
மாற்றுத்திறனாளி ( வயது வரம்பு இல்லை) ஆண்கள் / பெண்கள்
1. மாற்றுத்திறனாளி (Physically Challenged) – 50m run,
2. மாற்றுத்திறனாளி (Physically Challenged) – Badminton (5 Players),
3. பார்வைத்திறன் மாற்றுத்திறனாளி (Visually Challenged) – 100m run,
4. பார்வைத்திறன் மாற்றுத்திறனாளி (Visually Challenged) – Adapted Volleyball (7 Players),
5. மனவளர்ச்சி குன்றியோர் (Intellectually Disabled) – 100m run),
6. மனவளர்ச்சி குன்றியோர் (Intellectually Disabled) – Throw ball (7 Players),
7, செவித்திறன் மாற்றுத்திறனாளி (Hearing Impaired) – 100m run,
8. செவித்திறன் மாற்றுத்திறனாளி (Hearing Impaired) – Kabaddi (7 Players)
அரசு ஊழியர் ( வயது வரம்பு இல்லை) ஆண்கள் / பெண்கள்
1. கபடி, 2. தடகளம், 3. இறகுப்பந்து 4. கையுந்து பந்து . 5. செஸ்.
பளு தூக்குதல், கடற்கரை கையுந்து பந்து மற்றும் டென்னிஸ் விளையாட்டுகள் மண்டல அளவில் நடத்தப்பட்டு வெற்றி பெறும் அணிகள் மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்வார்கள். பிற விளையாட்டுகள் மாவட்ட அளவில் நடத்தப்பட்டு மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்வர்.
1. பொதுப்பிரிவு, மாற்றுத்திறனாளிகள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு நடத்தப்படும் போட்டிகளில் வெற்றி பெறும் அணிகள் மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்வார்கள்.
2. பள்ளி மற்றும் கல்லூரி மாணவ / மாணவிகள் பிரிவில் தேர்ந்தெடுக்கப்பட்ட குழு மாவட்ட அணிகளின் சார்பாக மாநிலப் போட்டிகளில் கலந்து கொள்வார்கள்.
3. தனி நபர் போட்டிகளில் தர வரிசையின்படி சிறந்த வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்வார்கள்.
பரிசுத்தொகை – மாவட்ட அளவிலான போட்டிகள்:
தனிநபர் / ஒற்றையர், இரட்டையர் முதல் இடம் ரூ.3000, இரண்டாம் இடம் ரூ.2000, மூன்றாம் இடம் ரூ.1000 மும், குழுப்போட்டிகள் ஒவ்வொருவருக்கும் முதல் இடம் ரூ.3000, இரண்டாம் இடம் ரூ.2000, மூன்றாம் இடம் ரூ.1000 மும் அளிக்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர், பேரறிஞர் அண்ணா மாவட்ட விளையாட்டரங்கம், காஞ்சிபுரம், அலுவலகத்திலோ (அல்லது) தொலைபேசி எண். 7401703481 (அல்லது) 044-27222628 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.மா.ஆர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
வெளியீடு:செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.

No comments
Thank you for your comments