Breaking News

காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இரவுக் காவலர் பணி ... உடனே விண்ணப்பிக்கலாம்...

காஞ்சிபுரம் மாவட்டம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், காலியாக உள்ள இரவுக் காவலர் பணியிடம் வேலைநாடுநர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் மா.ஆர்த்தி  அறிவித்துள்ளார்.


காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் காலியாக உள்ள இரவுக் காவலர் பணியிடத்தை நிரப்ப, அரசால் அனுமதிக்கப்பட்டதையடுத்து, கீழ்காணும் தகுதிகளை உடைய காஞ்சிபுரம் மாவட்டத்தை சார்ந்த வேலைநாடுநர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ஒரு இரவுக்காவலர் பணிக்காலியிடத்திற்கு, பொதுப் போட்டி (முன்னுரிமை அற்றவர்), (General Turn (Non Priority)) இன சுழற்சிக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான கல்வித்தகுதி எழுத படிக்க தெரிந்தவர் (5-ம் வகுப்பு தேர்ச்சி), வயது வரம்பு 01.07.2022 அன்றைய தேதியில் குறைந்தபட்ச வயது வரம்பு 18 ஆகும்.அதிகபட்ச வயது வரம்பு OC-32 BC&BCM&MBC/DNC-34 SC&SC(A) &ST-37 ஆகும்.

மேற்படி, தகுதியுள்ள விண்ணப்பதார்ர்கள் கையால் எழுதப்பட்ட விண்ணப்பத்துடன் கல்வித்தகுதி சான்றிதழ்கள், சாதிச் சான்றிழ், குடும்ப அட்டை, ஆதார் அட்டை மற்றும் வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை ஆகியவற்றின் நகலுடன் 28.12.2022 முதல் 13.01.2023 வரை மாலை 5.45 மணிக்குள் காஞ்சிபுரம் மாவட்ட  வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரிலோ/பதிவஞ்சல் மூலமாகவோ விண்ணப்பிக்குமாறு  மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் மா.ஆர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

செய்தி வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.

No comments

Thank you for your comments