Breaking News

வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வீட்டமனை பட்ட உட்பட நலத்திட்ட உதவிகள் வழங்கல்...

காஞ்சிபுரம் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில்,  பயனாளிகளுக்கு ரூ.8.56 இலட்சம்  மதிப்பிலான   நலத்திட்ட உதவிகளை  மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.மா.ஆர்த்தி,இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்கள்.


காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் நல்லுறவு மையத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று (26.12.2022) மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.மா.ஆர்த்தி இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு மையத்தில் பிரதி திங்கட்கிழமை தோறும் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, அம்மனுக்கள் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு வழங்கி தீர்வு காணப்பட்டு வருகிறது.

 இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்து 255 மனுக்களை பெற்று அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அரசு துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்கள்.

 இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், உத்திரமேரூர் வட்டம், அழிசூர் மற்றும் திணையாம்பூண்டி கிராமத்தை சேர்ந்த 12 பயனாளிகளுக்கு ரூ.8.50 இலட்சம் மதிப்பில் இலவச வீட்டுமனை பட்டாக்கள் மற்றும் மாற்றுத்திறனாளி நலத்துறை சார்பில், ரூ5,560/- மதிப்பில் காதுக்குபின் அணியும் காதொலிக் கருவி 2 மாற்று திறனாளிகள் பயனாளிகளுக்கும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்கள். 

மேலும் தாய்லாந்தில் நடைபெற்ற ஆசிய அளவிலான கிக் பாக்சிங் போட்டியில் தங்கபதக்கம் மற்றும் வெண்கலபதக்கம் வென்ற காஞ்சிபுரம் சேர்ந்த மாணவி நீனா, வெண்கலபதக்கம் வென்ற உத்திரமேரூரை சேர்ந்த மாணவன் சரத்ராஜ் ஆகியோர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பாராட்டினார்கள்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.கோ.சிவருத்ரய்யா, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி.பி.ஸ்ரீதேவி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திரு.புண்ணியகோட்டி, துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) திருமதி.சுமதி, மாவட்ட விளையாட்டு அலுவலர் திரு.ரமேஷ் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.



No comments

Thank you for your comments