Breaking News

இன்று மாலை 4 மணி வரை... இளைஞர் திறன் திருவிழா மற்றும் வேலைவாய்ப்பு முகாம்

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் மாவட்ட நிர்வாகம் இளைஞர் திறன் திருவிழா – வாலாஜாபாத் வட்டாரத்தில்  இளைஞர் திறன் திருவிழா மற்றும் வேலைவாய்ப்பு முகாம் சனிக்கிழமை(17.12.2022)  நடைபெறவுள்ளது



 காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் வட்டாரத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக, இளைஞர் திறன் திருவிழா (Youth Skill Festival)  மற்றும் வேலைவாய்ப்பு முகாம் (Job Fair) 17.12.2022  சனிக்கிழமை அன்று வாலாஜாபாத் திரு.வா.தி.மாசிலாமணி முதலியார்  மேல்நிலைப் பள்ளியில் நடைபெறவுள்ளது.  

தீன் தயாள் உபத்யாய கிராமின் கௌசல்யா யோஜனா (DDU-GKY) திட்டத்தின் கீழ், 18 வயது முதல் 35 வயது வரையுள்ள ஆண், பெண் இருபாலருக்கும், இளைஞர் திறன் திருவிழா மூலம் தேர்வு செய்து பல்வேறு  தனியார் துறைகளின் கீழ் வேலைவாய்ப்புடன் கூடிய திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படவுள்ளது. 

🖱 நிறைய அமைச்சர்களுக்கு வாய்கோளாறு... 

பட்டியலிட்டு பங்கம் செய்த பாஜக அண்ணாமலை

மேலும் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம், மாவட்ட தொழில் மையம் மற்றும் தமிழ்நாடு ஆதிதிராவிடர் குடியிருப்பு மேம்பாட்டு கழகம் போன்ற திட்டங்களின் மூலம் அலங்கார ஆடை வடிவமைப்பு, அழகுகலை, டிரைவிங், உதவி செவிலியர், கணினி சில்லறை வணிகம், மென் பொருள் உருவாக்குதல், துரித உணவு தயாரித்தல், மொபைல் போன் பழுது நீக்குதல் போன்ற திறன் பயிற்சிகள் பல்வேறு தகுதிவாய்ந்த பயிற்சி நிறுவனங்கள் மூலம் இலவசமாக வழங்கப்பட உள்ளது. 

மேலும் தனியார் நிறுவனங்களில் பணியாற்ற ஏதுவாக இந்த பயிற்சிகளுக்கு தகுதியான இளைஞர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். இதையொட்டி  17.12.2022 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வாலாஜாபாத் திரு.வா.தி.மாசிலாமணி முதலியார்  மேல்நிலைப்பள்ளியில் இளைஞர் திறன் திருவிழா நடைபெறவுள்ளது. எனவே முகாமில் காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த ஆண் மற்றும் பெண் இருபாலரும்  பங்கேற்று தகுதியான  பயிற்சியை தேர்வு செய்து பயன் பெற கேட்டுக்கொள்ளப்படுகிறது.

No comments

Thank you for your comments