Breaking News

உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்கள் தொழில் தொடங்க மானியம் அறிவிப்பு

பாரத பிரதமரின் உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டம் (பிஎம்எப்எம்இ) 2021/2021ம் ஆண்டு முதல் 2024/2025 ஆண்டு வரை 5 ஆண்டுகளுக்கு செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.


இத்திட்டம் மத்திய அரசின் 60 சதவீதம் மற்றும் மாநில அரசின் 40 சதவீதம் நிதி பங்களிப்புடன் செயல்படுத்தப்படுகிறது.  இத்திட்டத்தில் ஒரு மாவட்டத்திற்கு ஒரு விளை பொருள் என்ற முறையில் செயல்படுத்தப்படுகிறது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் சமையல் எண்ணெய் உற்பத்தி, மரச்செக்கு எண்ணைய் உற்பத்தி சார்ந்த தொழில் நிறுவனங்களுக்கும், உணவு பதப்படுத்தும் மற்றும் வேளாண் சார்ந்த மதிப்புக் கூட்டு தொழில் தொடங்க விருப்பம் உள்ள தனி நபர், மகளிர் சுய உதவி குழுக்கள். உழவர் உற்பத்தியாளர்கள் குழுக்கள் ஆகியோருக்கும், ஏற்கனவே தொழிலில் ஈடுபட்டுள்ள குறு நிறுவனங்களை விரிவாக்கம் செய்தல், புதிய நிறுவனங்கள் தொடங்குதல், குழு அடிப்படையில் பொது உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தி தருதல், வர்த்தக முத்திரை மற்றும் சந்தைப்படுத்துதல், தொழில்நுட்பப் பயிற்சிகள் போன்ற இனங்களுக்கு மானியத்துடன் கூடிய வங்கிக் கடன் வழங்கப்படுகிறது.

🖱 நிறைய அமைச்சர்களுக்கு வாய்கோளாறு... 

பட்டியலிட்டு பங்கம் செய்த பாஜக அண்ணாமலை

இத்திட்டத்தில் உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களுக்கு தகுதியான திட்ட மதிப்பீட்டில் 10 சதவீதம் தொழில் முதலீடு மற்றும் 90 சதவீதம் கடன் பெற்று அவற்றில் 35 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது.

வர்த்தக முத்திரை மற்றும் சந்தைப்படுத்துதலுக்கு 50 சதவீதம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் விண்ணப்பங்கள் பெறவும், திட்ட அறிக்கை தயாரிக்கவும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் வள நபர்கள் (ரிசோர்ஸ் பர்சன்ஸ்) பணிபுரிந்து வருகின்றனர்.

இத்திட்டத்தின் மூலம் பயன்பெற விருப்பமுள்ளவர்கள் https://pmfme.mofpi.gov.in/pmfme என்ற இணையதள முகவரியில் விண்ணப்பம் செய்யலாம் அல்லது உரிய ஆவணங்களுடன் பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், காஞ்சிபுரம் (044-27238837, 27236686, 27238551) அலுவலகத்தை நேரிலோ அல்லது காஞ்சிபுரம் மாவட்ட வள நபர்களின்  கைபேசி எண்களை (9710707526, 7092953437, 7339478549, 8428984803)  தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.மா.ஆர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.






No comments

Thank you for your comments