Breaking News

தொடர்மழையால் காஞ்சிபுரம்-செங்கல்பட்டு மாவட்டத்தில் 403 ஏரிகள் நிரம்பின

காஞ்சிபுரம்: 

மாண்டஸ் புயல் காரணமாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. புயல் ஓய்ந்த பின்னரும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.  


பலத்த மழை காரணமாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரிகளுக்கும் நீர்வரத்து அதிகரித்து உள்ளது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஒருங்கிணைந்த மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் மொத்தம் 909 ஏரிகள் உள்ளன. 

பதவி வரும் போகும் கழகம் தான் நம் அடையாளம்...
நம் உயிர் மூச்சு.....   முதல்வர் மு.க ஸ்டாலின் பேச்சு

இதில் 403 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டி உள்ளது. 326 ஏரிகள் 75 சதவீதத்துக்கு மேல் நிரம்பி இருக்கிறது. இதே போல் 139 ஏரிகள் 50 சதவீதத்துக்கு மேலும், 41 ஏரிகள் 25 சதவீதத்துக்கு மேலும் நிரம்பி இருப்பதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.




 

No comments

Thank you for your comments