Breaking News

நான்காவது முறையாக நிரம்பி வழியும் பழையசீவரம் பாலாறு தடுப்பணை..

பழையசீவரம் பாலாறு தடுப்பணை நான்காவது முறையாக நிரம்பி வழிவதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.



வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயல்  மாமல்லபுரம் அருகே கரையை கடந்தது. இதனால். தமிழகம் முழுவதும் கடந்த இரண்டு நாட்களாக அதிதீவிர காற்று மற்றும் கனமழை பெய்தது. காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் பலத்த மழை பெய்தது .

கடந்த 24 மணி நேரத்தில் காஞ்சிபுரத்தில் 184 மில்லி மீட்டர், குன்றத்தூரில் 147 மில்லி மீட்டர் மழை பதிவாகியது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 381 குளங்களில் 146 குளங்கள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. 84 குளங்கள் 80 சதவீதத்தை தாண்டி உள்ளது.

பதவி வரும் போகும் கழகம் தான் நம் அடையாளம்...
நம் உயிர் மூச்சு.....   முதல்வர் மு.க ஸ்டாலின் பேச்சு

காஞ்சிபுரம் வேகவதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கரையோர குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து நீர் செல்கிறது. 

இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம் பாலாற்றின் குறுக்கே பழையசீவரம் பகுதியில் ரூ. 42 கோடியில் கட்டப்பட்ட தடுப்பணை நான்காவது முறையாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நிரம்பி வழிகிறது.

இதனால், தாம்பரம்-பல்லாவரம் கூட்டு குடிநீர் திட்டம் மற்றும் பல்வேறு கிராம கூட்டுக் குடிநீர் திட்டங்கள் மிகுந்த பயன் பெறும். மேலும், பல ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும். கிணறுகளில் நிலத்தடி நீர் உயர் மட்டம் அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.

No comments

Thank you for your comments