Breaking News

சிறப்பாக செயல்படும் மருத்துவமனை பட்டியலில் கோவைக்கு 3வது இடம்

கோவை :

தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளின் செயல்பாடுகள் குறித்து தமிழ்நாடு சுகாதார சீர்திருத்த திட்டம் மற்றும் தேசிய சுகாதார இயக்கம் சார்பில், 6 மாதங்களுக்கு ஒருமுறை ஆய்வு செய்து தரவரிசைப் படுத்தப்படுகிறது. அதன்படி, தமிழகத்தில் கடந்த 6 மாதங்களில் (ஏப்ரல் முதல் செப்டம்பர்) சிறப்பாக செயல்பட்ட மருத்துவமனைகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 


இதில், கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை 3ம் இடம் பிடித்துள்ளது. சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதலிடத்தையும், சேலம் மோகன் குமாரமங்கலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளன. 

இந்த ஆய்வில், புறநோயாளிகள், உள்நோயாளிகள் எண்ணிக்கை, எம்.ஆர்.ஐ., இருதய பிரிவு, அறுவை சிகிச்சைகள், மகப்பேறு சிகிச்சை, பாம்பு கடிக்கு அளிக்கப்படும் சிகிச்சை, விபத்து சிகிச்சை, நோயாளிகள் கவனிப்பு, டாக்டர்கள் - நோயாளிகளின் எண்ணிக்கை, நிர்வாக செயல்பாடுகள் உள்ளிட்ட 39 விதமான செயல்பாடுகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டன.  

🖱 நிறைய அமைச்சர்களுக்கு வாய்கோளாறு... 

பட்டியலிட்டு பங்கம் செய்த பாஜக அண்ணாமலை

இது குறித்து அரசு மருத்துவமனை டீன் நிர்மலா கூறியதாவது, கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையான மாதங்களில் தினசரி சராசரியாக 3,204 பேர் புறநோயாளிகள் பிரிவில் சிகிச்சைப் பெற்றுள்ளனர். தவிர, உள்நோயாளிகள் பிரிவில் 1,353 பேர் சிகிச்சைப் பெறுகின்றனர். 238 டாக்டர்கள் உள்ளனர்.  

 மேலும், 936 சிக்கலான அறுவை சிகிச்சைகள், 1,175 மகப்பேறு சிகிச்சைகளும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறு அறுவை சிகிச்சைகளும் மேற் கொள்ளப்பட்டுள்ளன. கடந்த 6 மாதங்களில் சராசரியாக மாதத்திற்கு 644 பிரசவங்கள் நடைபெற்றுள்ளன. அரசு மருத்துவமனையில் தாய்&சேய் உயிரிழப்பு வெகுவாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

 



No comments

Thank you for your comments