குடியிருப்பு பகுதிக்குள் மழை நீர் வடிவதால் திடீர் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்!
கோவை :
கோவை மாவட்டம் குனியமுத்தூர் 87-வது வார்டுக்கு உட்பட்ட குறிஞ்சி நகர், வசந்தம் கார்டன், எஸ்.என்.ஆர் கார்டன் ஆகிய பகுதிகளில் கனமழை காரணமாக குடியிருப்பு பகுதிக்குள் மழைநீர் வெள்ளம் போல் தேங்கியது.
வீடுகளுக்குள்ளும் மழை நீர் புகுந்தது. நீண்ட காலமாக இவ்வாறான சூழ்நிலை இருப்பதால் அப்பகுதி பொதுமக்கள் அனைவரும் குனியமுத்தூர் பெட்ரோல் பங்க் முன்பு திரண்டனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் வந்து உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சாலை மறியலில் ஈடுபட முயற்சித்தனர்.
இதுபற்றிய தகவல் அறிந்ததும் போலீஸ் துணை கமிஷனர் சிலம்பரசன், உதவி கமிஷனர்கள் ரகுபதி ராஜா , சதீஷ்குமார், அருள்முருகன், வீரபாண்டி, மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.போராட்டத்தில் ஈடுபட முயன்ற பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
🖱 நிறைய அமைச்சர்களுக்கு வாய்கோளாறு...
பட்டியலிட்டு பங்கம் செய்த பாஜக அண்ணாமலை
அப்போது பொதுமக்கள் கூறியதாவது, ஒவ்வொரு முறை மழை வரும் போதும் குறிஞ்சி நகர், எஸ் என் ஆர் கார்டன் ஆகிய பகுதிகளில் மழைநீர் தேங்குகிறது.
இதுதொடர்பாக மாநகராட்சியில் எத்தனை முறை நாங்கள் மனு கொடுத்தும் எந்தவித பதிலும் இதுவரை வரவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
போலீஸ் துணை கமிஷனர் சிலம்பரசன் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து, பொதுமக்கள் கலைந்து சென்றனர் இதனால் அந்த பகுதியில் ஒரு மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

No comments
Thank you for your comments