இரவில் விளக்குகள் எறியாததால் பூ மார்க்கெட் பகுதியில் உள்ள பூங்காக்கள் இருளில் சூழ்ந்த அவலம்
கோவை பூ மார்க்கெட் அருகே சுக்ர வார்பேட்டையில் அறிஞர் அண்ணா பூங்கா என்னும் பெயரில் சிறுவர் பூங்கா செயல்பட்டு வருகிறது. தினமும் காலை 5 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் பூங்கா திறந்திருக்கும்.
இப்பகுதி சேர்ந்த ஏராளமான பொதுமக்களும் குழந்தைகளும் அங்கு செல்வது வழக்கம். இந்நிலையில் பூங்காவில் மின்விளக்குகள் எதுவும் எரியாததால் மிகவும் இருள் சூழ்ந்த நிலையில் உள்ளது. மாலை 6 மணிக்கு மேல் நடைப்பயிற்சி செய்பவர்கள் மிகவும் சிரமமான நிலையில் உள்ளனர்.
🖱 நிறைய அமைச்சர்களுக்கு வாய்கோளாறு...
பட்டியலிட்டு பங்கம் செய்த பாஜக அண்ணாமலை
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:
இந்த சுற்று வட்டாரத்திலேயே இது ஒன்று தான் பொழுதுபோக்கு பூங்கா. இதனால் தினமும் ஏராளமான பொதுமக்கள் இப்பூங்காவை நாடி வருகிறார்கள். பூங்கா இருள் சூழ்ந்து நிலையில் இருப்பதால் வந்துவிட்டு ஏமாற்றத்துடன் திரும்பி செல்லும் சூழ்நிலை ஏற்படுகிறது.
தற்போது மழை காலம் என்பதால் 6 மணிக்கு எல்லாம் இருட்டி விடுகிறது. அதனால் பூங்காவிற்குள் செல்லும்போது எதிரே வருவது யார் என்பது கூட தெரியாது நிலை காணப்படுகிறது. மேலும் புதர்கள் செடிகள் அதிகமாக உள்ளதால் பாம்புகளின் நடமட்டம் உள்ளே அதிகமாக காணப்படுகிறது. இதனால் இருட்டு காரணமாக பாம்புகளை மிதிக்கும் சூழ்நிலையும் ஏற்படுகிறது. எனவே விரைவில் பூங்காவிற்குள் இருக்கும் மின்விளக்குகளை எரியச் செய்ய வேண்டும்.
இதுதவிர இரவு நேரங்களில் பூங்காவை சுற்றி சம்பந்தமில்லாத கார்கள் நின்று கொண்டிருக்கிறது. எங்கிருந்தோ வருபவர்கள் பூங்கா அருகே காரை நிறுத்தி விட்டு சென்று விடுகின்றனர். இந்த நடைமுறை மர்மமாகவே உள்ளது. காவல்துறையினர் அடிக்கடி பகுதிக்கு ரோந்து வந்தால் மட்டுமே அச்சமின்றி வாழ முடியும்.
கோவை மாநகராட்சி 70 வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் பூங்கா அமைந்துள்ளது. இது குறித்து எழுபதாவது வார்டு கவுன்சிலர் சர்மிளாவிடம் கேட்டபோது, மாமன்ற கூட்டத்தில் பேசி உள்ளோம். ஒரு பகுதி முழுவதும் மின் விளக்குகளை பொருத்திவிட்டோம். மற்றொரு பகுதி விரைவில் பொருத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

No comments
Thank you for your comments