Breaking News

அரசு பேருந்து மீது கல்குவாரி கனரக லாரி நேருக்கு நேர் மோதி விபத்து.

அரசு பேருந்து மீது கல்குவாரி கனரக லாரி நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.  தாயும், குழந்தையும், ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர் உள்பட 3 பேர் உயிரிழப்பு...  5 பேர் காயத்துடன் மருத்துவமனையில் அனுமதி... உத்திரமேரூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.


காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் தாலுக்கா சாலவாக்கம் அருகே உள்ள படூர் கிராமத்திலிருந்து காஞ்சிபுரம் நோக்கி அரசு பேருந்து சென்றுள்ளது. 

திருமுக்கூடல் -  நெல்வாய் சாலையில் சிறுமையிலூர் கிராமம் அருகே அரசு பேருந்து சென்ற பொழுது  கல்குவாரிக்கு அதி வேகமாக வந்த கனரக  லாரி எதிர்பாராத விதமாக அரசு பேருந்து மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது.

விபத்தில் அரசு பேருந்தில் பயணம் செய்த படூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சித்த மருத்துவ ஊழியராக பணியாற்றும்  கோவிந்தவாடி அகரம் கிராமத்தை  சேர்ந்த புனிதா, மற்றும் காஞ்சிபுரம் அடுத்த காரை சீயட்டி  கிராமத்தை சேர்ந்த ரதி ஆகிய இரு பெண்களும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்கள்.



மேலும்  உயிரிழந்த ரதியின் மூன்று வயது குழந்தை தர்ஷிகா படுகாயத்துடன் மீட்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. இதன் மூலம் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆனது.

இராசேந்திர சோழன் வரலாறு - கடல் கடந்த பயணம் 

விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த சாலவாக்கம் மற்றும் உத்திரமேரூர் போலீசார் அரசு  பேருந்திலிருந்து  ஐந்து பேரை படுகாயத்துடன் மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் விபத்து குறித்து உத்திரமேரூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பி ஓடிய கனரக லாரி ஓட்டுநரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

No comments

Thank you for your comments