துணை முதல்வருக்கு நிகரான பொறுப்பு அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் உள்ளது.. அமைச்சர் அன்பில் மகேஸ் பேச்சு
சென்னை:
துணை முதல்வருக்கு நிகரான பொறுப்பை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கையாண்டு கொண்டு இருப்பதாக அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்தார்.
திருச்சியில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பள்ளிக் கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பேசுகையில்,
பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோரின் நோக்கத்ததை நோக்கி நான் உழைத்து கொண்டு இருக்கிறேன் என்று தன்னுடைய 'திராவிட மாடல்' புத்தகத்தில் முதல்வர் தெரிவித்து இருப்பார்.
சொல்வது மட்டுமல்ல அதை செயலிலும் காட்டக் கூடிய முதல்வரை நாம் பெற்றுள்ளோம். கடந்த முறை டிசம்பர் 30 ஆம் தேதி முதல்வர் திருச்சி வந்தார். இந்த முறை டிசம்பர் 29 ஆம் தேதி திருச்சி வந்துள்ளார்.
🖱விமர்சனம் வரத்தான் செய்யும்... உதயநிதியின் அமைச்சர் பதவி குறித்து ஸ்டாலின் பேச்சு
எங்களைப் பொறுத்த வரையில் இன்றில் இருந்து ஆங்கில புத்தாண்டு தொடங்கி விட்டது. அதற்கான பரிசுகளை பெறத்தான் நாங்கள் வந்து இருக்கிறோம்.
மகளிர் சுய உதவிக் குழுவைச் சேர்ந்த சகோதரிகளுக்கு நம்முடைய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நலத்திட்ட உதவிகளை வழங்கி உள்ளார். நம்முடைய "அமைச்சர் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுதுறை அமைச்சர் மட்டுமல்ல. சிறப்பு திட்ட செயலாகத்துறை அமைச்சரும் கூட. கிட்டத்தட்ட துணை முதல்வருக்கு நிகரான பொறுப்பைக் கையாண்டு கொண்டு உள்ளார் உதயநிதி ஸ்டாலின்". அவரையும் வரவேற்கிறோம். இவ்வாறு அமைச்சர் அன்பில் மகேஸ் பேசினார்.
No comments
Thank you for your comments