ஆதனூர் ஊராட்சி மன்ற தலைவரின் அதிகார பறிப்பை ரத்து செய்யக்கோரி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு
ஆதனூர் ஊராட்சி மன்ற தலைவரின் அதிகார பறிப்பை ரத்து செய்யக்கோரி 500க்கும் மேற்பட்ட கிராம மக்கள் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நேரில் வந்து ஆட்சியரிடம் மனு வழங்கினார்கள்.
ஊராட்சி மன்ற தலைவர் தமிழ் அமுதன், ஊராட்சி மன்ற நிர்வாகத்தை செயல்படுத்தி வந்த நிலையில், உள்ளாட்சி சட்ட விதிகளை மீறி நிதி மேலாண்மையை தவறாக கையாண்டு உள்ளார் என்ற குற்றச்சாட்டின் பேரில் ஊராட்சியின் வரவு செலவு கணக்குகளை நிர்வகிக்கும் அதிகாரத்தை பறித்து மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி உத்தரவு பிறப்பித்திருந்தார்.
நம் உயிர் மூச்சு..... முதல்வர் மு.க ஸ்டாலின் பேச்சு
ஊராட்சி மன்ற கிராம மக்களுக்கு தேவையான அன்றாட நடவடிக்கைகளை ஊராட்சி மன்ற தலைவர் கவனிக்க முடியாத காரணத்தால் கிராம மக்கள் கடந்த சில தினங்களாக அவதிப்பட்டு வருகின்றனர்.
இதனால் பாதிக்கப்பட்ட கிராம மக்கள் 500க்கும் மேற்பட்டவர்கள் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திற்கு நேரில் வந்து மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ஆதனூர் ஊராட்சி மன்ற தலைவரின் அதிகாரப் பறிப்பை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்து கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியர் ஆர்த்தியிடம் வழங்கினார்கள்.
கிராம மக்களின் மனுக்களின் மீது பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி உறுதி அளித்ததின் பேரில் ஆதனூர் கிராம மக்கள் கலைந்து சென்றனர்.
ஒரே நேரத்தில் 500க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை தந்ததால் பரபரப்பு ஏற்பட்டதை தொடர்ந்து ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணிக்கு குவிக்கப்பட்டனர்.
.jpg)
.jpg)
.jpg)


No comments
Thank you for your comments