ஆட்டு கொட்டகை மாட்டு கொட்டகை அமைப்பதற்கு 114 பயனாளிகளுக்கு பணி ஆணை
உத்திரமேரூர் ஒன்றிய வட்டார வளர்ச்சி (BDO) அலுவலகத்தில் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினரும் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட கழக செயலாளர் சுந்தர் தலைமையில் ஆட்டு கொட்டகை மாட்டு கொட்டகை அமைப்பதற்கு விண்ணப்பித்திருந்த பயனாளிகள் 114 பணி ஆணை வழங்குகின்ற நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் உத்திரமேரூர் ஒன்றிய குழு தலைவர் ஹேமலதா,ஒன்றிய செயலாளர் ஞானசேகரன்,உத்திரமேரூர் பேரூராட்சி தலைவர் சசிகுமார், பேரூர் கழக செயலாளர் என்.எஸ்.பாரிவள்ளல், தலைமை செயற்குழு உறுப்பினர் நாகன், பேரூராட்சி துணை தலைவர் இளமதி கோவிந்தராஜ் ,ஒன்றிய கவுன்சிலர்கள் எஸ்.தயாளன், சுகுணா சுந்தர்ராஜன் அவர்கள் உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.



No comments
Thank you for your comments