P.T.V.S உயர்நிலைப்பள்ளியில் அறிவியல், கணிதம் மற்றும் சமூக அறிவியல் கண்காட்சி
பூக்கடை சத்திரம் P.T.V.S உயர்நிலைப்பள்ளியில் அறிவியல், கணிதம் மற்றும் சமூக அறிவியல் கண்காட்சியை பள்ளியின் நிர்வாகியும் & நகர வங்கி தலைவருமான பாலாஜி துவக்கி வைத்தார்.
காஞ்சிபுரம் மாநகராட்சி உட்பட்ட பூக்கடை சத்திரம் பகுதியில் P.T.V.S உயர்நிலைப் பள்ளி உள்ளது இந்த பள்ளியில் சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்.
இன்று அறிவியல், கணிதம் மற்றும் சமூக அறிவியல் கண்காட்சியை பள்ளி நிர்வாகியும் நகர கூட்டுறவு வங்கி தலைவருமான பாலாஜி அவர்கள் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார்.
மாவட்ட தொடக்கப்பள்ளி கல்வி அலுவலர் முனி சுப்புராயன், பள்ளியின் தலைமை ஆசிரியர் சுடர்& பள்ளியின் ஆசிரியர் ஆசிரியர்கள் முன்னிலையில் மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்று கண்காட்சியில் தங்கள் படைப்புகளை காட்சிப்படுத்தி சிறப்பானதொரு விளக்கமும் அளித்தனர்.
குறிப்பாக தத்ரூபமான மாதிரி வாக்குச்சாவடியை விளக்கும் படைப்பு, நிலநடுக்கம் ஏற்படுவதை ஆரம்பத்திலேயே உணர்த்தும் எச்சரிக்கை மணி, மழைக்காலங்களில் மழைநீர் சூழாமல் இருக்கும் பாதுகாப்பான வீடு, தவறான திசையில் செல்பவரை விபத்து ஏற்படாத வண்ணம் தடுக்கும் முன்னெச்சரிக்கை தடுப்பு, வீணாக வீட்டில் தூக்கி எரியப்படும் பொருட்களைக் கொண்டு உபயோகமான பொருளாக மாற்றுதல் உள்ளிட்ட பல்வேறு படைப்புகள் காண்போரை ஈர்க்கும் வகையிலும் மாணவ சமுதாயத்தின் நவின அறிவியல் கூர்மையும் எடுத்துக்காட்டு வகையில் அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.



No comments
Thank you for your comments