Breaking News

காஞ்சிபுரம் மாநகராட்சியில் நகர சபை கூட்டம் குறித்து தீர்மானம் அனைவரும் ஒருமனதாக ஏற்பு

காஞ்சிபுரம்  மாநகராட்சி அவசரக் கூட்டத்தில் முதல்முறையாக நகர சபை கூட்டம் அனைத்து வார்டுகளிலும் இன்று (நவ.1ம் தேதி) நடைபெற உள்ளது என்று மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ் தகவல் தெரிவித்துள்ளார்.


காஞ்சிபுரம்  மாநகராட்சியில் எட்டாவது மாமன்ற கூட்டம் மேயர் மகாலட்சுமி யுவராஜ் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டம் ஒரு அவசரக் கூட்டமாக நடைபெற்றது 

இதில் காஞ்சிபுரத்தில் முதல் முறையாக அனைத்து அடித்தட்டு மகளும் பயன்படும் வகையில் நகர சபை கூட்டம் காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 51 வார்டுகளிலும் இன்று நடைபெற உள்ளது என மகாலட்சுமி  தெரிவித்தார். 

இதில் வாடில் 5 நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு வார்டில் உள்ள குறைகள் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து மனுக்கள் பெறப்பட்டு அந்த வார்டு கவுன்சிலர் மூலம் மனுக்கள் மேயரிடத்தில் ஒப்படைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இதன் மூலம்   மக்கள் அனைவரும் பயன்பெற வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

 இதில் மாநகராட்சி துணை மேயர் குமரகுருநாதன் முன்னிலை வைத்தார் மாநகராட்சி ஆணையர் கண்ணன் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் என ஏராளமானோர் அனைத்து தீர்மானத்தையும் ஒருமனதாக ஏற்றுக் கொண்டனர்.

No comments

Thank you for your comments