கனமழை எதிரொலி... இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு...
சென்னை:
கனமழை காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு பரவலாக மழையும் எனவும், ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் நேற்று (அக்.31) கனமழை முதல் மிக கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், சென்னை மற்றும் புறநகர்களில் மாலையில் தொடங்கி கனமழை பெய்து வந்தது. குறிப்பாக, திருவள்ளூர் மாவட்டத்தில் பரவலாக கனமழை பெய்தது. கனமழையின் காரணமாக சாலையின் ஆங்காங்கே நீர் தேங்கியிருப்பதால் நடந்து பொதுமக்கள் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.
இந்நிலையில், இன்று (01-11-2022) திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் அல்பி ஜான் உத்தரவிட்டுள்ளார். நாளை மிக கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்த நிலையில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


No comments
Thank you for your comments