தரை கிணற்றில் தவறி விழுந்த குழந்தை சடலமாக மீட்பு
விருத்தாசலம் அருகே தரை கிணற்றில் தவறி விழுந்த குழந்தையை தீயணைப்பு துறையினர் நீண்ட நேரம் போராட்டத்துக்கு பின் குழந்தையின் உடலை மீட்டனர். மூன்று வயது குழந்தை கிணற்றில் விழுந்து இறந்தது அப்பகுதி மக்களிடையே பரபரப்பையும் சோகத்தை ஏற்படுத்தியது
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த சிறுப்பாக்கம் அருகே அடுத்த மங்களூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜ்குமார் இவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகின்றார். இவரது மனைவி சங்கீதா இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் ஆறு வயதில் ரிஸ்வித் என்ற மகனும் மூன்று வயதில் ரிஷ்மித்ரா என்ற மகளும் உள்ளனர்
ஊராட்சி மன்ற தலைவர் சுரேஷ் பரபரப்பு பேட்டி
இந்நிலையில் சங்கீதா மற்றும் அவரது மாமனார் மற்றும் மாமியாருடன் அருகில் உள்ள வயல் பகுதியில் குழந்தையின் கையில் செல்போனை கொடுத்துவிட்டு வயல் வேலை செய்து கொண்டிருந்தனர் அப்பொழுது குழந்தை அருகில் இருந்த தரை கிணற்றில் தவறி விழுந்துள்ளது குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த தாய் சங்கீதா குழந்தை கிணற்றில் விழுந்து இருப்பது தெரிய வந்தது
இதனைக் கண்ட கிராமத்து மக்கள் வேப்பூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் நீண்ட நேரம் போராட்டத்துக்கு பின் குழந்தையின் உடலை மீட்டனர் மூன்று வயது குழந்தை கிணற்றில் விழுந்து இறந்தது அப்பகுதி மக்களிடையே பரபரப்பையும் சோகத்தை ஏற்படுத்தியது
No comments
Thank you for your comments