திமுக அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து பகுஜன் சமாஜ் கட்சியின் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
ஆளும் திமுக அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து இன்று (19.11.2022) தமிழ்நாடு மாநிலம், செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் நகரத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் #புதிய மோட்டார் வாகன சட்டம், #மின் கட்டண உயர்வு, #பால் கட்டணம் உயர்வு ஆகியவற்றை உடனடியாக திரும்ப பெறக்கோரி வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தை தலைமை தாங்கி வழிநடத்திய மதுராந்தகம் தொகுதி தலைவர் சிறப்பழைப்பாளராக கலந்துக்கொண்டு கண்டன உரையாற்றிய செங்கல்பட்டு மாவட்ட தலைவர் திரு, இளையராஜா, காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் திரு,பிரபாகரன், பல்லாவரம் தொகுதி குட்பட்ட மூத்த நிர்வாகிகள் அண்ணன் சுப்பிரமணி, ஜீவ சரவணன், மணி அவர்களுடன் சு.இளங்கவி கலந்துக்கொண்டு கண்டன உரையாற்றினார்.
செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகிகள், தொகுதி நிர்வாகிகள் பெண்கள் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர்.
ஊழல்.. லஞ்சம்... அம்பலபடுத்தி கோஷம்...
No comments
Thank you for your comments