Breaking News

மறைந்த முன்னாள் அமைச்சர் சி.வி.எம்.அண்ணாமலையின் 106-வது பிறந்தநாள் விழா... எம்.பி. மற்றும் எம்.எல்.ஏக்கள் மாலை அணிவித்து மரியாதை

பேரறிஞர் அண்ணா பிறந்த காஞ்சிபுரத்தில்,  திமுகவின் முக்கிய நிர்வாகியாக இருந்தவரும், செந்தமிழ்ச் செல்வர் என போற்றப்பட்ட வரும், முத்தமிழறிஞர் கலைஞரின் அமைச்சரவையில் சமூக நலத்துறை அமைச்சராக பணியாற்றியவரும், தற்போதைய காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினரின் தாத்தாவுமான, முன்னாள் அமைச்சர் சிவிஎம். அண்ணாமலை அவர்களின் 106-வது ஆண்டு பிறந்தநாள் விழா காஞ்சிபுரத்தில் கொண்டாடப்பட்டது.



இதையொட்டி காஞ்சிபுரம் செங்கழு நீரோடை வீதியில் உள்ள மறைந்த முன்னாள் அமைச்சர் சிவிஎம். அண்ணாமலை அவர்களின் இல்லத்தில் நடைபெற்ற விழாவில், காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளரும்,உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினருமான க.சுந்தர்,திமுக கழக மாணவரவணி செயலாளரும் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினருமான CVMP.ஏழிலரசன்,காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வம் ஆகியோர் கலந்துகொண்டு CVM.அண்ணாமலை அவர்களின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

இந்நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் மேயர் மகாலட்சுமி யுவராஜ்,திமுக மாநகர செயலாளர் CKV.தமிழ்ச்செல்வன்,மாவட்ட பொருளாளர் சன் பிரண்ட் கே.ஆறுமுகம், ஒன்றிய செயலாளர்கள் PM.குமார், குமணன், சாலவாக்கம் குமார், படுநெல்லி பாபு, வாலாஜாபாத் பேரூர் செயலாளர் பாண்டியன், தலைமை பொதுக்குழு உறுப்பினர் சிகாமணி,தலைமை செயற்குழு உறுப்பினர் M.S.சுகுமார், வாலாஜாபாத் ஒன்றிய குழு தலைவர் தேவேந்திரன், காஞ்சிபுரம் ஒன்றிய குழு பெருந்தலைவர் மலர்கொடி குமார், பகுதி செயலாளர்கள் திலகர், மண்டல குழு தலைவர் சந்துரு,தசரதன்,வெங்கடேசன், காஞ்சிபுரம் முருகன் பட்டு கூட்டுறவு சங்க தலைவர் A.S.முத்து செல்வன்,மாநில வர்த்தக அணி துணை செயலாளர் V.S.ராமகிருஷ்ணன், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் யுவராஜ் மற்றும் திமுக கட்சியின் முக்கிய நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்து கொண்டனர்.







No comments

Thank you for your comments