விற்பனைக்குள்ள மனைகள் / வீடுகள் / அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான ஒதுக்கீடுக்கு குலுக்கல் அறிவிப்பு
வேலூர்
வேலூர் வீட்டு வசதி பிரிவிற்குட்பட்ட வேலூர், திருவண்ணாமலை, இராணிப்பேட்டை, காஞ்சிபுரம் மாவட்டங்களில், வேலூர் பகுதி- I & V, கழிஞ்சூர், தாராபடவேடு, சீக்கராஜபுரம், ஆம்பூர், திருவண்ணாமலை, ஆற்காடு, ஆரணி மற்றும் காஞ்சிபுரம் ஆகிய திட்டங்களில் விற்பனைக்குள்ள மனைகள் / வீடுகள் / அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான விண்ணப்பங்கள் 05.09.2022 முதல் 30.09.2022 வரை பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டது.
பெறப்பட்ட விண்ணப்பங்களில் இருந்து ஒதுக்கீடுதாரரை குலுக்கல் முறை மூலம் தேர்ந்தெடுக்க, வேலூர் வீட்டு வசதி பிரிவு வளாகத்தில் 25.11.2022 அன்று காலை 10.00 மணியளவில் குலுக்கல் நடைபெற உள்ளதால் விண்ணப்பதாரர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பெ.குமாரவேல் பாண்டியன் கேட்டுக்கொள்கிறார்.
மேலும் , அணுக வேண்டிய முகவரி செயற்பொறியாளர் (ம) நிர்வாக அலுவலர், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், வேலூர் வீட்டு வசதி பிரிவு, பகுதி-I. சத்துவாச்சாரி, வேலூர் -632 009, தொலைபேசி எண். 0416-2252561.

No comments
Thank you for your comments