குடியிருப்பு பகுதிகள் ஆய்வு... தேவையான நடவடிக்கை எடுக்க ஆட்சியர் உத்திரவு
வேலூர்:
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் கால்வாய்கள், சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் பெ.குமாரவேல் பாண்டியன் 22.11.2022 அன்று நேரடியாக பார்வையிட்டு ஆய்வு செய்து பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கும், வருவாய்துறை அதிகாரிகளுக்கும் நடவடிக்கை எடுக்க உத்திரவிட்டார்.
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு வட்டம் பள்ளிகொண்டா பேரூராட்சிகுட்பட்ட மங்களம் செல்லும் சாலை சாரதிப்பேட்டை பகுதியில் பாலாற்று நீர்வரத்து கால்வாய் மற்றும் ஆற்று வெள்ளத்தால் சேதமடைந்த சாலையை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்து பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கும், வருவாய்துறை அதிகாரிகளுக்கும் தேவையான நடவடிக்கை எடுக்க உத்திரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து, வெட்டுவானம் ஊராட்சி குடியிருப்பு பகுதிகளில் வீடுகளுக்கு பட்டா வழங்குவது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரடியாக பார்வையிட்டு ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்திரவிட்டார்.
இந்த ஆய்வின் போது மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது,
அணைக்கட்டு வட்டம் பள்ளிகொண்டா பேரூராட்சிகுட்பட்ட பகுதிகளில் சாலைகள் சில இடங்களில் நீரினால் அரிக்கப்பட்டுள்ளது. இதனை செப்பனிட தேவையான நடவடிக்க மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் இப்பகுதியில் நான்கு கால்வாய்கள் தூர்வார நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பள்ளிகொண்டா நகர குடியிருப்பு பகுதியில் 12 வீடுகளுக்கு பட்டா வழங்க நேரடியாக ஆய்வு செய்து பேரூராட்சியில் தீர்மானம் செய்து உரிய அரசு விதிகளின்படி பரிசீலனை செய்யப்படும். மேலும் இப்பகுதியில் 65 % முதல் 75% வரை நீர்வரத்து கால்வாய் தூர்வாரப்பட்டுள்ளது. தூர்வாரப்பட்ட கால்வாய்களில் புதர் செடிகளை அகற்ற 100 நாட்கள் வேலையாட்களின் மூலம் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
பொதுமக்கள் கால்வாய்களில் குப்பைகளை போடாதவாறு உள்ளாட்சி அமைப்புகள் கண்காணிக்க வேண்டும். வேலூர் மாவட்டத்தில் 50 % மேல் ஏரிகள் நிரம்பி உள்ளது. முழுமையாக அனைத்து ஏரிகளிலும் நீர் நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
விரிஞ்சிபுரம் ஏரி 40% நிரம்பினால் முழுயாகிவிடும். பாலாற்றங்கரையில் இருபுறங்களிலும் உள்ள ஏரிகள் முழுமையாக நிரப்ப முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் பெ.குமாரவேல் பாண்டியன் தெரிவித்தார்.
இந்த ஆய்வின் போது வருவாய் கோட்டாட்சியர் பூங்கொடி, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மு.பாபு, வட்டாட்சியர் ரமேஷ், பொதுப்பணித்துறை அதிகாரிகள், நீர்வளத்துறை அதிகாரிகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

No comments
Thank you for your comments