Breaking News

26-11-2022 அன்று மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

சேலம் மாவட்டத்தில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்  26.11.2022 அன்று நடைபெறவுள்ளது என்று மாவட்ட ஆட்சித்தலைவர் செ. கார்மேகம் தகவல் தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 26.11.2022 அன்று நடைபெறவுள்ளது. 

இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் செ.கார்மேகம் தெரிவித்துள்ளதாவது :

சேலம் மாவட்ட வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்பெறும் வகையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு & தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடந்தும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மாண்புமிகு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் அவர்கள் தலைமையில் வருகின்ற 26.11.2022 அன்று சேலம் பத்மவாணி  கலை மற்றும் அறிவியல் கல்லூரி  வளாகத்தில் நடைபெறவுள்ளது.  

🔥 இராணி மேரி கல்லூரியை இடிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டார் அம்மையார் ஜெயலலிதா   🔥 நான் இந்த நேரத்தில் அரசியல் எல்லாம் பேச விரும்பவில்லை, அது தேவையும் இல்லை  🔥 பட்டமளிப்பு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை

இம்முகாமில் உற்பத்தி, தகவல் தொழில்நுட்பம், ஜவுளி, வங்கி சேவைகள், காப்பீடு, மருத்துவம், கட்டுமானம் உள்ளிட்ட  முக்கிய துறைகளில் இருந்து 300-க்கும் மேற்பட்ட முன்னணி வேலையளிக்கும் நிறுவனங்கள் 40,000-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு பணியாளர்களைத் தேர்வு செய்யவுள்ளனர். மேலும், இம்முகாமில் 20,000-க்கும் மேற்பட்ட வேலைநாடுநர்களும் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.   

காலை 8.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை நடைபெறவிருக்கும் இம்முகாமில் 8ஆம் வகுப்பு, 10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு, ஐ.டி.ஐ, டிப்ளமோ, பட்டப்படிப்பு, பொறியியல், செவிலியர், ஆசிரியர், தொழிற்கல்வி போன்ற அனைத்து விதமான கல்விதகுதி உள்ளவர்களும் கலந்துகொண்டு பயன்பெறலாம். 

இத்தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொள்ள விருப்பமுள்ள வேலையளிக்கும் நிறுவனங்களும், வேலைநாடுநர்களும் www.tnprivatejobs.tn.gov.in  என்ற இணையதளத்தில் பதிவு செய்யுமாறு தெரிவிக்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு jobfairmccsalem@gmail.com   என்ற மின்னஞ்சல் வாயிலாகவும் மற்றும் 0427-2401750 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.

 எனவே பணிக்காலியிடங்களுக்கு நபர்களை தேர்வு செய்யவுள்ள தொழில் நிறுவனங்களும், வேலைவாய்ப்பற்ற இளைஞர்களும் இம்முகாமில் கலந்துகொண்டு பயன்பெறலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ. கார்மேகம்,  அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு : செய்தி - மக்கள் தொடர்பு அலுவலகம், சேலம் மாவட்டம்.

 


No comments

Thank you for your comments