Breaking News

உணவகம், திருமண மண்டப உரிமையாளர்கள் , கழிவுநீர் சுத்திகரிப்பு தொழிலாளர் சங்க பிரதிநிதிகளுடன் ஆலோசனை கூட்டம்

காஞ்சிபுரம் மாவட்டம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்ட அரங்கில், காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள தனியார் நிறுவன உணவகம், திருமண மண்டப உரிமையாளர்கள் மற்றும் கழிவுநீர் உறிஞ்சி ஊர்தி உரிமையாளர்கள் மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு தொழிலாளர் சங்க பிரதிநிதிகளுடன் ஆலோசனை மற்றும் விழிப்புணர்வு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.மா.ஆர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.



காஞ்சிபுரம் மாவட்டம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்ட அரங்கில், காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள தனியார் நிறுவன உணவகம், திருமண மண்டப உரிமையாளர்கள் மற்றும் கழிவுநீர் உறிஞ்சி ஊர்தி உரிமையாளர்கள் மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு தொழிலாளர் சங்க பிரதிநிதிகளுடன் ஆலோசனை மற்றும் விழிப்புணர்வு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.மா.ஆர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (31.10.2022) நடைபெற்றது. 

இக்கூட்டத்தில்: கழிவுநீர் தொட்டியினை சுத்தம் செய்யும் பணிக்கு இயந்திரத்தினை மட்டுமே பயன்படுத்தி சுத்தம் செய்யவேண்டும். மனிதர்களை உள்ளே இறக்கி சுத்தம் செய்யக்கூடாது.


 மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், கழிவுநீர் உறிஞ்சும் இயந்திரத்தை இயக்குபவர்கள் தகுந்த பாதுகாப்பு உடைகளை பயன்படுத்துவது குறித்தும் தெரிவிக்கப்பட்டது.

கழிவுநீர் வாகன உரிமையாளர்கள் தீயணைப்புத்துறை அலுவலரிடமிருந்து தடையின்மைச் சான்று பெறப்பட வேண்டுமெனவும் சம்மந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளில் பதிவு செய்யப்பட வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டது.

 இது தொடர்பாக பொதுமக்களின் பார்வைக்கு விளம்பரப் பதாகைகள் வைத்தும் மற்றும் துண்டு பிரசுரங்கள் வாயிலாகவும்  விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.சுதாகர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி.பி.ஸ்ரீதேவி, காஞ்சிபுரம் மாநகராட்சி ஆணையர் திரு.கண்ணன் மற்றும் அரசு அலுவலர்கள்  கலந்து கொண்டனர்.

வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.


No comments

Thank you for your comments